மசாஜ் இயந்திரங்கள் வழங்கிய தன்னார்வல தொண்டு நிறுவனம் – மனிதநேயத்துடன் விவசாயிகளின் போராட்டம்!!

0

டெல்லியில் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருவதை அடுத்து, தன்னார்வல தொண்டு நிறுவனம் சார்பாக அவ்ரகளுக்கு தண்ணீர் புகாத கூடாரம் அமைக்கப்பட்டு தரப்பட்டுள்ளது. அதே போல் குளிருக்கு இதமாக அவர்களுக்கு மசாஜ் செய்யும் இயந்திரமும், உண்பதற்கு பிஸ்சாவும் வழங்கப்பட்டு வருகின்றது.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு:

மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக அரியானா, பஞ்சாப் உட்பட 6 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர். கடும் குளிர் கடந்த 18 நாட்களாக போராடி வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டம் வலுத்துக்கொண்டே செல்கின்றது.

கடுங்குளிரில் விவசாயிகள் போராடுவதை அடுத்து “கல்சா எய்ட்” என்ற சர்வேதேச தன்னார்வல தொண்டு நிறுவனம் போராடி வரும் விவசாயிகளுக்கு ரொட்டி தயாரிக்கும் இயந்திரம், துணிகளை துவைக்க பயன்படுத்தப்படும் நவீன இயந்திரம், குளிருக்கு இதமாக மசாஜ் செய்யும் இயந்திரங்கள், படுக்கை வசதிகளுடன் கூடிய கூடாரங்கள் அமைத்து தந்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்றால் பாரதிய கிசான் கூட்டமைப்பு விவசாயிகளுக்கு பிட்ஸா, பிரியாணி, தேநீர், ரொட்டிகள் விநியோகிக்க ஆரம்பித்துள்ளனர். இது போராட்டக்களத்தில் இருக்கும் விவசாயிகளை தெம்புடன் போராட உதவுகின்றனர். இப்படி தொண்டு நிறுவனங்கள் உதவி செய்வதை கூட சிலர் தவறான நோக்கத்தில் தான் எடுத்து கொள்கின்றனர்.

காவல் நிலையத்தில் சிக்கிய விராட் கோஹ்லியின் முதல் ஆடி கார் – வெளியான உண்மை தகவல்!!

சமூகவலைத்தளங்களில் சிலர் “விவசாயிகள் அனைவரும் நன்றாக உணவு உண்டு, வசதியாக உள்ளனர், இதனால் போராட்டத்தின் நோக்கம் கேள்விக்குறியாகிறது” என்று தெரிவித்து வருகின்றனர். தாங்கள் உதவாவிட்டாலும் கூட இப்படி நன்றாக பேசி மட்டும் வைக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here