காவல் நிலையத்தில் சிக்கிய விராட் கோஹ்லியின் முதல் ஆடி கார் – வெளியான உண்மை தகவல்!!

0

பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் ஆடி கார் ஒன்று காவல் நிலையத்தில் சேதமடைந்து நிலையில் உள்ளது. அதன் பின்னணி என்ன என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.

விராட் கோஹ்லி

விராட் கோஹ்லி தனது இளம் வயதிலேயே அதிரடி ஆட்டத்தின் மூலமாக கிரிக்கெட் ரசிகர்களின் பிடித்தமான வீரரானார். தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரும் ஆவார். உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் தற்போதைக்கு அவர் தான் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு ஆடி நிறுவனத்தின் கார்களின் மீது அதிக ஆர்வம். 2012 ம் ஆண்டில் ஆடி நிறுவனம் வெளியிட்டு இருந்த R 8 என்ற காரை வாங்கினார். இதுவே இவரின் முதல் ஆடி கார் ஆகும்.

இந்நிலையில் இந்த கார் தற்போது மும்பை காவல் நிலையத்தில் மிகவும் சேதமடைந்து நிலையில் உள்ளது. காரணம், 2016ம் ஆண்டு சாகர் தாக்கர் என்ற இடைத்தரகரிடம் இந்த காரை 2.5 கோடி ரூபாய்க்கு கோஹ்லி விற்றுள்ளார். அந்த நபர் ஏமாற்று வழக்கு ஒன்றில் காவல்துறையிடம் 2 மாதங்களில் சிக்கி உள்ளார். எனவே அவர் சம்பந்தமான பொருட்கள் அனைத்தையும் காவல் துறையினர் கைப்பற்றி உள்ளனர். இதன் காரணமாகவே கோஹ்லியின் அந்த கார் காவல் நிலையத்தில் இருந்திருக்கிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்போது முதல் அந்த கார் அங்கு உள்ளதால் 2.5 ரூபாய் மதிப்பிலான சொகுசு கார் கண்டமாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக கோஹ்லி அந்த காரை விற்கும் போதே உரிமையாளர் பெயரை சட்டப்பூர்வமாக மாற்றி உள்ளார். இதனாலேயே இந்த வழக்குகள் எதிலும் அவர் பெயர் சிக்கவில்லை என்பதை அறியமுடிகிறது. இதன்பின்னர் கோஹ்லி பல சொகுசு ரக கார் கார்களையும் வாங்கியுள்ளார். இந்நிலையில் சென்ற வருடம் அவரது சொகுசு கார் ஒன்றை அவரது ஊழியர் குடிநீரை கொண்டு சுத்தம் செய்தது தொடர்பாக மாநகராட்சி அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here