சிபிஎஸ்சி பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு – ரமேஷ் பொக்ரியால்அறிவிப்பு!!

0

தற்போது நடப்பு கல்வி ஆண்டிற்கான சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாக உள்ளது. இதனை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்சி:

கடந்த மார்ச் மாத இறுதி வாரத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. மேலும் ஊரடங்கு காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆன்லைன் வகுப்பு மூலம் அவர்களுக்கு பாடம் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. ஆகவே கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி அன்று 10 மற்றும் 12ம் வகுப்புளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் பாடம் எடுத்ததால் சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுவுத்தேர்வுக்காக பாடம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். மேலும் அனைத்து பள்ளிகளிலும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் கட்டாய முறையில் பின்பற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

மேலும் பள்ளிக்கு வருவதற்கு பெற்றோர்களின் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது நடப்பாண்டிற்கான சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாக உள்ளது. இந்த அட்டவணை cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியாகும். இதனை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here