பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள்களில் சாதி பெயருடன் டோக்கன் – மயிலாடுதுறையில் சர்ச்சை!!

0

தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சைக்கிளிலும் மாணவிகளின் பெயருடன் அவர்களது சாதி பெயரையும் சேர்த்து டோக்கன் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இலவச சைக்கிள் டோக்கன்

ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளிகளில் உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு இலவசமாக சைக்கிள் மற்றும் மடிக்கணினி வழங்குவது வழக்கம். தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதை ஒட்டி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் தற்போது பள்ளிகள் தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிளில் மாணவிகளின் பெயருடன் சாதி பெயரையும் சேர்த்து டோக்கன் வழங்கப்பட்டிருக்கிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கான இலவச சைக்கிள் வழங்கும் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பூம்புகாரை சேர்ந்த அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜ் மாணவிகளுக்கான இலவச மிதிவண்டியை வழங்கினார். அந்த மிதிவண்டிகளில் மாணவிகளின் பெயருடன் சேர்த்து அவர்கள் சாதி பெயரும் குறிக்கப்பட்டிருந்தது. இதை கண்ட மாணவிகளும் அவர்களது பெற்றோரும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

மாணவிகளின் சாதி பிரிவை குறிப்பிட்டு டோக்கன் வைத்தது மாணவிகளிடையே பிரிவினையை உருவாக்கும் விதத்தில் உள்ளது என பள்ளிக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து இத்தகைய செயலில் ஈடுபட்டவர்கள் மீதும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி மாணவர் சங்கத்தினர் வலியுறுத்திவருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கல்வித்துறை அதிகாரி புகழேந்தியிடம் கேட்ட போது, இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என பதிலளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here