சிபிஎஸ்சி தேர்வுகள் ரத்து?? நாளை மாலைக்குள் முடிவு!!

0
CBSE Exam
CBSE Exam

இந்தியாவில் சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வது குறித்து தொடரப்பட்ட வழக்கில் சிபிஎஸ்சி நிர்வாகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது.

சிபிஎஸ்சி தேர்வுகள்:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்ததை தொடர்ந்து 1 முதல் 11ம் வகுப்பு வரை மாநில பாடத்திட்ட பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் அனைத்து மாணவர்களுகும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளையும் ரத்து செய்யக்கோரி பெற்றோர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து பரிசீலித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டு இருந்தனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

CBSE EXAMS
CBSE EXAMS

ஒலிம்பிக் தினம் 2020 – வொர்க்அவுட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் வீரர்கள்!!

தற்போது சிபிஎஸ்சி நிர்வாகம் சார்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. தேர்வுகளை ரத்து செய்வது குறித்து நாளை மாலைக்குள் முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே JEE, நீட் தேர்வுகளை ரத்து செய்ய கோரிக்கை எழுந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here