ரஜினி வீட்டில் அப்பவே தரமான சம்பவத்தை செஞ்ச விஜயகாந்த்.., ஆடிப்போன சூப்பர் ஸ்டார்!!

0
ரஜினி வீட்டில் அப்பவே தரமான சம்பவத்தை செஞ்ச விஜயகாந்த்.., ஆடிப்போன சூப்பர் ஸ்டார்!!
ரஜினி வீட்டில் அப்பவே தரமான சம்பவத்தை செஞ்ச விஜயகாந்த்.., ஆடிப்போன சூப்பர் ஸ்டார்!!

நடிகர் விஜயகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் தர்ணா போராட்டத்தை நடத்திய சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவி வருகிறது.

நடிகர் விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் 80ஸ், 90ஸ் காலக்கட்டத்தில் ஆக்சன் கதாநாயகனாக வலம் வந்தவர் தான் கேப்டன் விஜயகாந்த். இவர் நடிகராக இருந்து பல இயக்குனர், நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை உயர்த்தியுள்ளார். மேலும் கடந்த 2000ம் ஆண்டு நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த ராதா ரவி, வங்கிகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் திகைத்து நின்றுள்ளார். அதன் பின்னர் விஜயகாந்தை தலைவராக அமர வைத்தார் ராதா ரவி. பொறுப்பில் வந்தவுடன் கேப்டன் கடனை அடைக்க பல முயற்சிகளை முன்னெடுத்து வைத்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதில் ஒன்று தான் கலை நிகழ்ச்சி. அதாவது தமிழர்கள் அதிகம் இருக்கும் வெளிநாடுகளான, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி அதில் வரும் பணத்தை வைத்து கடனை அடைக்க பிளான் போட்டார் கேப்டன். மேலும் அதில் கலந்து கொள்ள அனைத்து ரசிகர்களையும் நேரில் சந்தித்து invite செய்தார். அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். அதற்கு ரஜினிகாந்த் மறுத்துள்ளார்.

படையப்பா மொத்த பட்ஜெட்டே இவ்ளோதான்., இதையும் ரஜினி தான் கொடுத்தாரு! கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு!!

என்ன செய்வதென்று தெரியாமல் கேப்டன் சோபாவில் இருந்து இறங்கி தரையில் அமர்ந்து நீங்க வரேன் என்று சொன்னால் தான், நான் சோபாவில் உட்காருவேன் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு ரஜினியை ஒப்புக்கொள்ள வைத்து நிகழ்ச்சியை நடத்தி முடித்தார் கேப்டன். அதன் மூலம் வந்த பணத்தை வைத்து கடனையும் அடைத்து, சங்கத்திற்காக கொஞ்சம் பணங்களையும் சேர்த்து வைத்துள்ளார். இவர் கட்சியை ஆரம்பித்த பிறகு நடிகர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here