
கத்தாரில் நடைபெற்று வரும் லெஜண்ட்ஸ் லீக் தொடருக்கான முதல் சீசனில் இந்திய மஹாராஜாஸ் அணி ஆசியா லென்ஸ் அணியிடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
லெஜண்ட்ஸ் லீக்
சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஓய்வு பெற்ற வீரர்களுக்காக, லெஜண்ட்ஸ் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 2 சீசன்களை கடந்துள்ள இந்த தொடரில், 3வது சீசன் நேற்று முதல் கத்தார் தலைநகர் தோகாவில், தொடங்கி உள்ளது. இதில், இந்திய மஹாராஜாஸ், ஆசியா லென்ஸ் மற்றும் வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் ஆகிய மூன்று அணிகள் பங்கு பெற்றுள்ளன.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த தொடரின் முதல் போட்டியில், ஆசியா லென்ஸ் அணிக்கு எதிராக கவுதம் கம்பீரின் வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணி விளையாடியது. டி20 வடிவில் நடத்தப்படும் இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆசியா லென்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை குவித்திருந்து. இதில், அதிகபட்சமாக பாகிஸ்தானின் மிஸ்பா உல் ஹக் 73, இலங்கையின் உபுல் தரங்கா 40 ரன்களை எடுத்திருந்தனர்.
IND vs AUS 4th Test: சர்வதேச அளவில் 17000 ரன்களை குவித்த ரோஹித் சர்மா!!
இதையடுத்து, களமிறங்கிய இந்திய மஹாராஜாஸ் அணியில், கௌதம் கம்பீர் 54, முரளி விஜய் 25, முகமது கைஃப் 22 என சீரான நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்த போட்டியின் அறிமுக வீரரான சுரேஷ் ரெய்னா 3 ரன்களில் வெளியேறி ஏமாற்றத்தை தந்தார். ஆசியா லென்ஸ் அணியின் அபாரமான பந்து வீச்சால், இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால், இந்திய மஹாராஜாஸ் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன் விளைவால் 9 ரன்கள் வித்தியாசத்தில், இந்திய மஹாராஜாஸ் தனது முதல் போட்டியில் தோல்வியை தழுவியது.