
இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இன்னிங்கிஸின் மூலம், சர்வதேச அளவில் 17000 ரன்களை குவித்து அசத்தி உள்ளார்.
ரோஹித் சர்மா
பார்டர் கவாஸ்கர் டிராபியின் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த போட்டியில், தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் குவித்து அசத்தி உள்ளது. இதில், ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா 180 மற்றும் கேமரூன் கிரீன் 114 ரன்கள் எடுத்திருந்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்தியா சார்பாக அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ரோஹித் சர்மா 21 ரன்களை விளாசியதன் மூலம், சர்வதேச அளவில் 17000 ரன்களை எட்டிய 7 வது இந்திய வீரரானார்.
ஒரு கோல் வித்தியாசத்தில் ஜெர்மனியை வீழ்த்திய இந்தியா…, FIH ப்ரோ லீக்கில் முன்னேற்றம்!!
இவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் 35 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம், சர்வதேச அளவிலான, டெஸ்டில் 3379, 50 ஓவரில் 9782 மற்றும் டி20யில் 3853 ரன்கள் என மொத்தமாக 17014 ரன்களை ரோஹித் சர்மா குவித்துள்ளார். மேலும், ரோஹித் சர்மா இந்திய அணிக்காக சொந்த மண்ணில் டெஸ்டில் 2,000 ரன்களை மிக வேகமாக கடந்த 2வது வீரரானார்.