இறந்த உடலில் இருந்து கொரோனா வைரஸ் பரவுமா?? மருத்துவர்கள் விளக்கம்.!

0

கொரோனாவால் பல நாடுகள் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். மேலும் பல உயிர்கள் காவு வாங்கி உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடலை தகனம் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டு வரும் நிலையில், இறந்தவர்களின் உடலில் இருந்து கொரோனா பரவுமா மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

மருத்துவர்கள்

இந்த பாதிப்பில் பொதுமக்கள் மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்களும் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். கொரோனா தொற்றுக்கு சிகிச்சைக்கு பெற்று வந்த 60 வயதான மருத்துவர் ஒருவர் சென்னையில் உயிரிழந்துள்ளார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அவரது உடலை தகனம் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டு பின்னர் அது சரி செய்யப்பட்டது.

Morocco Announces a Third Case of the New Coronavirus - Maroc ...

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நரம்பியல் சிகிச்சை நிபுணரான மருத்துவர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். அவரது உடலை தகனம் செய்ய எடுத்து சென்ற போது அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தையும் தாக்கியுள்ளனர். அதன்பின்னர் வேறு ஒரு இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சரீர விலகலை கடைபிடிக்காமல் இருந்தது கூடுதல் கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

Coronavirus updates: 11 test negative in Telangana; results of 7 ...

கொரோனா இடர்பாடுகளில் தங்களது குடும்பத்தினரை பிரிந்து, பரவும் தொற்று நோயையும் பொருட்படுத்தாமல் சேவையாற்றி வரும் மருத்துவர்கள் அதே நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நிலையில், அவர்களது உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுக்கும் மனிதாபிமானமற்ற செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இறந்தவர்களிடம் இருந்து பரவுமா ??

இந்த நிலையில், இறந்தவரின் சடலத்தில் இருந்து கொரோனா தொற்று பரவுமா என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர். அதன்படி பொதுமக்கள் புரிந்து கொள்ளும் படியான எளிய விளக்கம் கீழே அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவ பிரதான காரணமாக இருப்பது, தும்மும் போதும், இருமும் போதும் நுன்துகள்கள் சிதறி பரவுவதுதான். இறந்தவர் தும்முவதோ, இருமுவதோ கிடையாது என்பதால் தொற்று ஏற்படாது.

Nucleic Acid Test Chip For Multiple Respiratory Viruses Approved ...

ஒருவர் இறந்ததும் அவரது உடலில் வைரஸ் தொற்று பல்கி பரவுவது நின்று போகும். சடலத்தை எரிப்பதால், புதைப்பதால் தொற்று பரவாது. ஆழமான குழியை தாண்டி வைரஸ் மேலே ஏறி வராது. எரிக்கும் போது 4000 டிகிரி வெப்பத்தில் வைரஸ் உயிரோடு இருக்காது. புகையால் கொரோனா வைரஸ் பரவாது.

Coronavirus in Kerala | Key coronavirus lesson for India: How to ...

தோலில் வைரஸ் துகள்கள் இருக்கலாம், அப்படி இருந்தாலும் சடலத்தை தொடாத வகையில் வைரஸ் பரவாது. வழிகாட்டுதலின்படி, இறந்தவரின் உடலை தொட அனுமதி கிடையாது. அதனை சுகாதார ஊழியர்களே தகுந்த பாதுகாப்புடன் கையாள்வார்கள்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here