இந்தியாவில் 18 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு – அதிகரிக்கும் உயிரிழப்புகள்

0
Corona Treatment
Corona Treatment

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பலருக்கும் புது நம்பிக்கை பிறந்து உள்ளது. இந்த பதிவில் அனைத்து தரவுகளும் INDIA COVID 19 TRACKER மூலம் பெறப்பட்டது.

இந்தியாவில் கொரோனா:

இந்தியாவில் இதுவரை 17,874 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் நல்ல செய்தியாக 2,900 பேர் வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 568 பேர் உயிரிழந்து உள்ளனர். 14,406 பேர் வைரஸ் தாக்கத்தால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

மாநில வாரியாக பாதிப்பு விபரம்:

  1. மஹாராஷ்டிரா – 4,483 பேர் பாதிக்கப்பட்டும், 507 பேர் குணமடைந்து உள்ளனர். அங்கு இதுவரை 223 பேர் உயிரிழந்து உள்ளனர்.
  2. டெல்லி – 2,003 பேர் பாதிக்கப்பட்டும், 290 பேர் குணமடைந்து உள்ளனர். அங்கு இதுவரை 45 பேர் உயிரிழந்து உள்ளனர்.
  3. குஜராத் – 1,851 பேர் பாதிக்கப்பட்டும், 106 பேர் குணமடைந்து உள்ளனர். அங்கு இதுவரை 67 பேர் உயிரிழந்து உள்ளனர்.
  4. தமிழ்நாடு – 1,477 பேர் பாதிக்கப்பட்டும், 411 பேர் குணமடைந்து உள்ளனர். அங்கு இதுவரை 15 பேர் உயிரிழந்து உள்ளனர்.
  5. மத்தியப்பிரதேசம் – 1,407 பேர் பாதிக்கப்பட்டும், 131 பேர் குணமடைந்து உள்ளனர். அங்கு இதுவரை 72 பேர் உயிரிழந்து உள்ளனர்.
  6. உத்திரப்பிரதேசம் – 1,100 பேர் பாதிக்கப்பட்டும், 127 பேர் குணமடைந்து உள்ளனர். அங்கு இதுவரை 17 பேர் உயிரிழந்து உள்ளனர்.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here