மறைந்த கால்பந்து நட்சத்திரம் பீலே பற்றி அறிந்ததும் அறியாததும்…, சில துளிகள்!!

0
மறைந்த கால்பந்து நட்சத்திரம் பீலே பற்றி அறிந்ததும் அறியாததும்..., சில துளிகள்!!
மறைந்த கால்பந்து நட்சத்திரம் பீலே பற்றி அறிந்ததும் அறியாததும்..., சில துளிகள்!!

பிரேசில் அணி மூன்று முறை (1958, 1962, 1970) உலக கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்த கால்பந்து நட்சத்திர வீரர் பீலே புற்று நோயால் பாதிக்கப்பட்டு நேற்று தனது 82 வது வயதில் காலமானார். இவரது இறப்பிற்கு உலகில் உள்ள கால்பந்து ரசிகர்கள் அனைவரும் தங்களது இரங்கலை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இவரை பற்றி அறிந்த மற்றும் அறியாத தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் கால்பந்தில் மிட்பீல்டர் பொசிசனில் களமிறங்கி சர்வதேச அளவில் பல கோல்களை அடித்துள்ளார். கால்பந்து வரலாற்றிலேயே அதிக முறை ஹாட்ரிக் கோல் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையும் தனக்கு சொந்தமாகி கொண்டவராவார். இவர், உலக கோப்பை மற்றும் கிளப் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் என ஒட்டுமொத்தமாக 1363 போட்டிகளில் விளையாடி 1281 கோல்களை அடித்து இமாலய சாதனையை படைத்துள்ளார்.

ஐசிசி விருது 2022: டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரர் யார்?? பரிந்துரை பட்டியல் வெளியீடு!!

இவர் தனது 17 வயதிலேயே, 1958ல் சுவீடன் அணிக்கு எதிராக 2 கோல்களை அடித்து பிரேசில் அணி உலக கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தார். இவரை கவுரவிக்கும் விதமாக, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 2018ல் இவருக்கு சிலை ஓன்று அமைக்கப்பட்டது. இவர் கால்பந்து தொடர்களில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பிரேசிலின் விளையாட்டு துறை அமைச்சராகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இவரது, இறப்பிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று பிரேசில் அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here