ஐசிசி விருது 2022: டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரர் யார்?? பரிந்துரை பட்டியல் வெளியீடு!!

0
ஐசிசி விருது 2022: டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரர் யார்?? பரிந்துரை பட்டியல் வெளியீடு!!
ஐசிசி விருது 2022: டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரர் யார்?? பரிந்துரை பட்டியல் வெளியீடு!!

நடப்பு ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரர் என்ற விருதுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசியானது வெளியிட்டுள்ளது.

ஐசிசி விருது:

ஒவ்வொரு வருடமும் ஐசிசியானது மூன்று வடிவிலும் சிறந்த வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் நடுவர்கள் உள்ளிட்ட 13 பிரிவுகளில் விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசியானது, கடந்த இரண்டு நாட்களாக அறிவித்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஏற்கனவே, டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து, இன்று, டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 15 போட்டிகளில் 870 ரன்கள் மற்றும் 26 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் முதன்மை தேர்வாக உள்ளார்.

காயங்கள் சரியாக பல மாதங்கள் ஆகுமா?? அப்போ டெஸ்டில் ரிஷப் பந்த்க்கு மாற்று வீரராக யார் இருப்பா??

இவரை தொடர்ந்து, இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவ் 10 போட்டிகளில் 1061 ரன்கள், ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா 11 போட்டிகளில் 1080 ரன்கள் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா 9 போட்டிகளில் 47 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்த பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவருவருக்கு வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரர் என்ற விருதை பெறுவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here