தினமும் 45 ஆயிரம் பேருக்கு இலவசமாக உணவளிக்கும் நடிகர் – படத்தில் வில்லன் நிஜத்தில் இவருதான் ஹீரோ..!

0

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கால் உணவின்றி தவிப்பவர்களுக்கு தினமும் 45,000 பேர்களுக்கு இலவசமாக உணவளித்து வருகிறார் பிரபல நடிகர்.

தினமும் 45 ஆயிரம் பேருக்கு உணவு..!

கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவிக்கும் மக்களுக்கு நடிகர்-நடிகைகள் உதவிகள் வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் பிரபல இந்தி நடிகர் சோனு சூட் மும்பையில் தினமும் 45 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வருகிறார்.

இயக்குனராக அவதாரம் எடுக்கும் பிரபல காமெடி நடிகர் – ஹீரோயின் இவரா..!

சோனு சூட் ஏற்கனவே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் ஓய்வெடுக்க மும்பையில் உள்ள தனது 6 மாடி நட்சத்திர ஓட்டலை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சோனு சூட்..!

நடிகர் சிம்பு தீவிர உடற்பயிற்சி – வைரலாகும் வீடியோ..!

இது குறித்து அவர் கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உயிரை காப்பாற்ற மருத்துவர்களும், நர்சுகளும், தொண்டு நிறுவனத்தினரும் இரவும்-பகலும் உழைத்து வருகிறார்கள். இந்த நிலையில் நானும், என்னால் ஆன உதவிகளை செய்வதில் பெருமை அடைகிறேன் என்றார். அவரது சேவையை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here