மாஸ்க் இல்லையென்றால் அபராதம், வாகனம் பறிமுதல் – சென்னை மாநகராட்சி அதிரடி..!

0

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் அதனை மீறி வெளியே வரும் நபர்களை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளது.

அபராதம், வாகன பறிமுதல்:

தமிழகத்தில் அதிகம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தான் முதல் இடத்தில் உள்ளது. இருப்பினும் 144 தடை உத்தரவை மீறி வெளியே வருபவர்களை கட்டுப்படுத்த பல்வேறு விதிமுறைகளை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அமல்படுத்தி உள்ளார்.

  • சென்னையில் மாஸ்க் இல்லாமல் வெளியே நடமாடினால் ரூ. 100 அபராதமாக விதிக்கப்படும்.
  • மாஸ்க் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
  • மேலும் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை ஓட்டி வருபவர்களின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டு 6 மாதம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here