இயக்குனராக அவதாரம் எடுக்கும் பிரபல காமெடி நடிகர் – ஹீரோயின் இவரா..!

0

பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவர் உச்ச நடிகையை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை எஸ்பி சவுத்ரியின் 18 ரீல் புரொடெக்ஷன் தயாரிக்கும் என கூறப்படுகிறது.

நடிகர் யோகி பாபு..!

நடிகர் யோகி பாபு முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார். இந்நிலையில் நடிகர் யோகி பாபு இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோமாளி படம் வெளியான நேரத்தில் இதுகுறித்து ஹின்ட் கொடுத்திருந்தார் நடிகர் ஜெயம் ரவி. இந்நிலையில் இதுகுறித்த தகவல்தான் தற்போது கோலிவுட்டில் ஒரே பேச்சாக உள்ளது. எஸ்பி சவுத்ரியின் 18 ரீல் புரொடெக்ஷன் தயாரிக்கும் இந்த படத்திற்காக நடிகர் யோகி பாபு கதை, திரைக்கதை, வசனத் என ரெடியாகி வருகிறார்.

விஜயுடன் இணைந்து நடிக்கத் தயார்..! தல அஜித்தின் அதிரடி பதில்.!

நயன்தாரா ஹீரோயினா..?

இந்தப் படத்தில் டாப் நடிகையான நயன்தாராவை ஹீரோயினாக நடிக்கவும் பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. தற்போது லாக்டவுன் அமலில் இருப்பதால், நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு யோகி பாபுவின் படத்தில் நடிப்பது குறித்து நயன்தாரா முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவில் சிக்கித்தவிக்கும் குட்டி தளபதி – ஊரடங்கால் கவலையில் விஜய்..!

நயன்தாரா படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளாவிட்டால் நடிகை காஜல் அகர்வாலை அந்த படத்தில் நடிக்க வைக்கலாம் என்ற ஆப்ஷனையும் வைத்திருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here