ரகசியமாக நடைபெற்ற கியாரா அத்வானி – சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம்…,குவியும் வாழ்த்துக்கள்!!

0
ரகசியமாக நடைபெற்ற கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம்...,குவியும் வாழ்த்துக்கள்!!
ரகசியமாக நடைபெற்ற கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம்...,குவியும் வாழ்த்துக்கள்!!

பிரபல பாலிவுட் ஜோடிகளான கியாரா அத்வானி மற்றும் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா இருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.

பாலிவுட் திருமணம்

ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் நடிகை கியாரா அத்வானி இருவருக்கும் ராஜஸ்தானில் வைத்து கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. பல ஆண்டுகளாக காதல் பறவைகளாக சுற்றித்திரிந்த கியாரா அத்வானி மற்றும் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடி இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ‘ஷெர்ஷா’ என்ற திரைப்படத்தில் கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். இவர்களின் கெமிஸ்ட்ரி சினிமாவை தாண்டி வளர, இருவரும் ஜோடியாக பல இடங்களில் சுற்றி வந்தனர். ஆனால், இருவரைப் பற்றி கிசுகிசுக்கள் வரும் போதும் அவர்கள் காதலிப்பதை எந்தவொரு இடத்திலும் உறுதிப்படுத்தவில்லை.

இப்படி இருக்க, கியாரா அத்வானி மற்றும் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமணம் இன்று ரகசியமாக நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவுகள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, கியாரா அத்வானி மற்றும் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமணத்திற்கு நடிகை சமந்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மகளிர் IPL கிரிக்கெட் போட்டி மார்ச் 4 இல் துவக்கம்….,ஏலத்தில் 409 பேர் பங்கேற்பு!!

இதற்கிடையில், கியாரா அத்வானி மற்றும் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. நடிகை கியாரா அத்வானி தமிழில் வெளியான ‘தோனி’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here