மகளிர் IPL கிரிக்கெட் போட்டி மார்ச் 4 இல் துவக்கம்….,ஏலத்தில் 409 பேர் பங்கேற்பு!!

0
மகளிர் IPL கிரிக்கெட் போட்டி மார்ச் 4 இல் துவக்கம்....,ஏலத்தில் 409 பேர் பங்கேற்பு!!
மகளிர் IPL கிரிக்கெட் போட்டி மார்ச் 4 இல் துவக்கம்....,ஏலத்தில் 409 பேர் பங்கேற்பு!!

மகளிருக்கான IPL கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 409 வீராங்கனைகள் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் போட்டி

ஆடவருக்கு நடத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் உலகளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் முக்கிய தொடராக இருக்கிறது. இந்த IPL போட்டிகளை பெண்களுக்கும் நடத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற இருக்கும் மகளிர் IPL கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் பிப்ரவரி 13 ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த ஏலத்தில் சுமார் 1,525 வீராங்கனைகள் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து சுமார் 409 பேர் தேர்வு செய்யப்பட்டு IPL போட்டிகளில் கலந்து கொள்வார்கள். இப்போது, IPL போட்டிக்கு தேர்வான 246 இந்திய வீராங்கனைகளும், 163 வெளிநாட்டு வீராங்கனைகளும் பிப்ரவரி 13 ஆம் தேதியன்று மும்பையில் நடைபெறும் ஏலத்தில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

”நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்”…,கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் உருக்கம்…,

இதற்கிடையில், இந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் மார்ச் மாதம் 4 ஆம் தேதி துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி வரைக்கும் மும்பை ப்ரபோர்ன் மற்றும் டி.ஒய்.பாட்டில் மைதானங்களில் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here