விபத்தில் இருந்து மீண்டு தற்போது சிகிச்சை எடுத்து வரும் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், இப்போது தான் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று உணர்வதாக நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
ரிஷப் பண்ட்
இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் நட்சத்திர வீரர்களில் ஒருவர் ரிஷப் பண்ட். எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணியின் முக்கியமான விக்கெட் கீப்பர்களில் ஒருவராக மாறி இருந்தார் ரிஷப் பண்ட். மேலும், டி 20, ODI, 50 ஓவர் என அனைத்து வடிவங்களிலும் ஜொலித்து வந்த ரிஷப் பண்ட் விபத்து காரணமாக கிரிக்கெட்டை விட்டு சற்று விலகி இருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் தற்போது சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதனால் அவர் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்வாரா என்று கேள்விகள் எழுந்துள்ளது. இந்த சூழலில், தனது எதிர்பாராத ஓய்வு குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் ரிஷப் பண்ட்.
நாளை முதல் நடிகர் தனுஷின் ‘வாத்தி’ ரைடு ஆரம்பம்…, ட்ரைலர் ரிலீஸ் அப்டேட்…,
அதாவது, மைதானத்திற்கு வெளியே அமர்ந்து சுத்தமான காற்றை சுவாசிப்பது இவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்ட உணர்வை தரும் என்று உணர்ந்துகொண்டதாக நெகிழ்ச்சியடைந்துள்ளார் ரிஷப் பண்ட். இந்த பதிவை கண்ட ரசிகர்கள் பலரும், ரிஷப் பண்ட் விரைவில் குணமடைந்து மீண்டும் மைதானத்திற்குள் வர வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.