
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்றைய ப்ரோமோ வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இதன் நியூ ப்ரோமோ வெளியாகியுள்ளது. கடந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் விதிமீறல் செய்த அர்ச்சனா & விசித்ராவை கமல் சார் விசாரிக்கிறார். அதாவது எதற்காக ஜெயிலுக்கு செல்வதற்கு இருவரும் மறுத்தீர்கள் மற்றும் அதற்கான காரணம் என்னவென கேட்கிறார். அதற்கு விசித்ரா குரூப்பாக சேர்ந்து அனைவரும் எங்களை ஒஸ்டு பெர்பார்மர் என கூறியது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் நாங்கள் ஜெயிலுக்கு செல்ல மறுத்தோம் என கூறுகிறார்.
Enewz Tamil WhatsApp Channel
அதன் பிறகு சரி உங்கள் எண்ணம் படி ஜெயிலுக்கு செல்ல வேண்டிய நபர் யார் என இப்பொழுது கூறுங்கள் என கமல் கேட்க, அதற்கு பிராவோ மற்றும் கானா பாலா என விசித்ரா & அர்ச்சனா சேர்ந்து கூறுகின்றனர். இதைக் கேட்ட கமல் நீங்கள் இருவரும் சேர்ந்து திட்டம் போட்டு ஒரே ஒப்பீனியனை சொல்கிறீர்களா என கேட்கிறார். அதற்கு விசித்திரா நாங்கள் ஏன் சார் அப்படி சொல்ல வேண்டும் என கூற அதற்கு கமல் அப்பொழுது அவர்களும் அதைத்தானே செய்கிறார்கள் என பதிலடி கொடுக்கிறார். மேலும் மற்ற போட்டியாளர்களின் கருத்துக்கள் ஒரே மாதிரி இருப்பதில் என்ன தவறு எனக் கேட்கிறார். இதைக் கேட்டு ஹவுஸ்மேட்ஸ்கள் அனைவரும் கைதட்டி வரவேற்கின்றன.