
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்றுடன் 49 ஆவது நாளை எட்டி விறுவிறுப்பாக போய்க் கொண்டுள்ளது. இந்நிலையில் இதன் நியூ ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிக் பாஸ் போட்டியாளர்களின் புகைப்படம் உள்ள போஸ்டர்களை ஹவுஸ்மேட்ஸ்களிடம் கொடுத்த கமல் ”வெற்றி நடை போடுபவர், வெட்டி நடை போடுபவர்” என்ற டாஸ்கை விளையாட சொல்கிறார்.
Enewz Tamil WhatsApp Channel
அந்த வகையில் அர்ச்சனா வெற்றி நடை போடுகிறார் என ரவீனா மற்றும் விஷ்ணு ஆகியோர் கூறுகின்றனர். பின்னர் மாயா வெற்றி நடை போடுகிறார், பூர்ணிமா வெட்டி நடை போடுகிறார் என அர்ச்சனா கூறுகிறார். மேலும் பல நேரங்களில் மாயாவை பூர்ணிமா கெடுகிறார் என பகிரங்கமாக குறை கூறுகிறார். இதை கேட்டு ஷாக்கான பூர்ணிமா, இந்த கேம்மை எல்லாரும் எப்படி பார்க்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை என கமலிடம் சொல்கிறார். மேலும் பேசும்போது திணறிய பூர்ணிமா, எனக்கு பிளாக் ஆகுது சார் என கூறுகிறார். அதற்கு கமல், ஆமாம் அந்த பிளாக்கை எடுக்கணும், உங்களால் முடியவில்லை என்றால் சொல்லுங்க எடுத்துடுவோம் என சொல்கிறார்.
View this post on Instagram