
ஐசிசி சார்பாக நடத்தப்படும் ஒரு நாள் உலக தொடரின் இறுதிப் போட்டி இன்று (நவம்பர் 19) நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இந்த போட்டியை வென்று, இந்திய ரசிகர்களின் பல வருட உலக கோப்பை ஏக்கத்தை தீர்க்கும் பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர். ஆனால், அதிக (5) முறை உலக கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி அதற்கு இடம் கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தற்போது இந்த போட்டியில் டாஸ் போடப்பட்டுள்ளது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் லிஸ்ட்:
இந்தியா (பிளேயிங் லெவன்):ரோஹித் சர்மா (கேட்ச்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்
ஆஸ்திரேலியா (பிளேயிங் லெவன்): டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ்(w), மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ்(கேட்ச்), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
Enewz Tamil WhatsApp Channel
நேரம்: மதியம் 2:00 PM
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
டாஸ்:
டாஸ் வென்ற அணி ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து, இந்திய அணியின் வீரர்கள் பேட்டிங் செய்ய தயாராகி வருகின்றனர். கோப்பையை வெல்வதற்கான இந்த யுத்தத்தில் யார் சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.