உடல்நலக்குறைவால் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி…, கட்சியினர் கொடுத்த முக்கிய அப்டேட்!!

0
உடல்நலக்குறைவால் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி..., கட்சியினர் கொடுத்த முக்கிய அப்டேட்!!
உடல்நலக்குறைவால் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி..., கட்சியினர் கொடுத்த முக்கிய அப்டேட்!!

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பலரின் மனம் கவர்ந்த நாயகனாக ஜொலித்து வந்தவர் தான் விஜயகாந்த். தனது அசத்தலான நடிப்பால் திரையுலகை கலக்கி வந்த இவர் எக்கசக்க படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தியுள்ளார். மேலும் சினிமாவை தாண்டி தே.மு.தி.க. என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருந்தார். இவ்வாறு அரசியல் பணிகளை மேற்கொண்டு வந்த இவர் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி இருக்கையில் நேற்று இவரின் உடல்நிலை மிகவும் மோசமானதால் திடீரென மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் சளி அதிகரித்ததன் காரணமாக சுவாச பிரச்சனை சந்தித்து வரும் இவருக்கு மருத்துவர்கள் கூடுதல் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் இன்னும் ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் எனவும், விஜயகாந்த் உடல் நலம் குறித்து பரவும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் எனவும் கட்சியினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here