கூடவே இருந்து குழி பறிச்சுட்டாரு.., தினேஷ் செயலால் கொந்தளித்த அர்ச்சனா.., சண்டை காட்சியுடன் BB ப்ரோமோ!!!

0
தினேஷ் செயலால் கொந்தளித்த அர்ச்சனா.. சண்டை காட்சியுடன் BB ப்ரோமோ!!!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை கமல் போட்டியாளர்களை வெளுத்து வாங்கிய நிலையில் இரண்டு நாட்கள் வீடு அமைதியாக இருந்தது. இப்போது மீண்டும் சண்டை அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் இப்போது வெளியாகிய ப்ரோமோவில் பிக் பாஸ் யார் Ticket to Finale ல் பங்கேற்க தகுதி உடையவர்கள் என போட்டியாளர்களிடம் கேட்கிறார். அப்போது விஷ்ணு விஜயை பற்றி சொல்கிறார். அடுத்ததாக தினேஷ் நான் இதற்கு அர்ச்சனாவை தேர்ந்தெடுக்கிறேன்.

அர்ச்சனாவுக்கு Ticket to Finale பற்றி வேல்யூ தெரியுமா என்று தெரியவில்லை. இதனால் நான் அவரை தேர்வு செய்கிறேன் என்கிறார். இதை தொடர்ந்து பிக் பாஸ் விஜய், அர்ச்சனா இருவரும் Ticket to Finale க்கு தகுதி பெரும் வாய்ப்பை இழக்கின்றனர் என அறிவிக்கிறார். பின் அர்ச்சனா விசித்ராவிடம் நான் கூடவே இருந்தேன். அண்ணா அண்ணா என்று அவரை சுத்தி தான் வந்தேன். ஆனால் அவரே இப்படி செய்வாருன்னு நான் நினைச்சு பாக்கல என தினேஷ் மேல் உள்ள கோபத்தை வெளிப்படுத்துகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here