‘உங்கள மாதிரி குரூப்பிஸம் செய்ற ஆளு நான் இல்லை’ – ரியோவை வெளுத்து வாங்கிய சனம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த கால் சென்டர் டாஸ்கால் போட்டியாளர்களுக்கு இடையே பல கலகங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. அதில் சனம் மற்றும் ரியோ இடையே பெரிய தகராறு ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 52வது நாளை கடந்து வந்துள்ளது. இந்த வாரத்தில் போட்டியாளர்களுக்கு கால் சென்டர் டாஸ்க் ஒன்றை அளித்துள்ளார் பிக் பாஸ். ரொம்ப ஈஸியான டாஸ்க் என்று கருதியவர்களுக்கு நேற்றைய எபிசோடை பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த சின்ன டாஸ்கால் போட்டியாளர்களுக்கு இடையே பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகிறது. அர்ச்சனா பாலாஜி இடையே நேற்று பல சண்டைகள் ஏற்பட்டது. மேலும் சம்யுக்தா மற்றும் சனம் இடையே தகராறும் ஏற்பட்டது. சம்யுக்தா தேவையில்லாமல் வாயை விட்டு தற்போது மக்கள் பலரும் அவர் மீது கடுப்பில் உள்ளனர் என்றே சொல்லலாம்.

இன்றைய ப்ரோமோவும் தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் கேபிக்கு சோம் கால் செய்ய சரி எதாவது சீரியஸான கேள்வி கேட்பார் என்று பார்த்தால் மொக்கையாக உங்கள் வீட்டில் வளரும் நாய் என்றால் மிகவும் உயிர் என்று கூறினீர்கள் அதை விட்டு எப்படி வந்தீர்கள்.

என்று காமெடியாக கேட்க மேலும் உங்கள் பல்லில் ஏன் கேப் இருக்கு அதனால் தான் கேபி என்று பெயர் வைத்தார்களா?? என்று கேட்க கேபி சிரிக்கிறார். அதன் பிறகு சோம் போனை வைக்க சொல்ல வைத்து விடுகிறார். வெளியே வரும் சோம் எதுக்கு போனை வச்ச என்று கேட்க சனம் முந்திக்கொண்டு உனக்கு தான் பாயிண்ட்ஸ் போகும் என்று கூற கேபி தெரிஞ்சு தான் வச்சேன் என்று மூஞ்சியில் அடித்தது போல பேசுகிறார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் பாலாஜியும் இதை தான் ஆரம்பத்தில் இருந்து சொன்னேன். எல்லாரும் சேர்ந்து ஒருவரை காப்பாற்றுகின்றனர் என்று கூறுகிறார். அடுத்த ப்ரோமோவும் வெளியானது. அதில் சனம் மற்றும் ரியோ இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

அதாவது ரியோ ஆஜித்துக்கு கால் செய்து சம்யுக்தா மற்றும் சனம் நட்பு அழகாக இருப்பதாக கூற, எப்படி என்னை சம்யுக்தாவுடன் இணைத்து பேசலாம் என்று சண்டையிடுகிறார். மேலும் ரியோவை பார்த்து உங்கள மாதிரி அன்புவை வைத்து கேம் விளையாட எனக்கு தெரியாது என்று வார்த்தையை விடுகிறார் சனம். இதனால் ரியோவும் கோபமடைந்து சனம் ஷெட்டியிடம் கத்துகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here