நெற்றியில் எந்த கிழமைகளில், என்ன திலகம் இட வேண்டும்?? முழுவிபரங்கள் இதோ உங்களுக்காக!!

0

எந்த கிழமைகளில் எந்த கடவுளை வணங்கி என்ன திலகம் இட வேண்டும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். பொதுவாக கோவிலுக்கு செல்லும்போது மற்றும் வீட்டில் குளித்த பிறகு நெற்றியில் திருநீறு, குங்குமம் அல்லது சந்தனம் பூசிக்கொள்வது வழக்கம். இவை, அழகிற்கு மட்டுமின்றி பல அறிவியல் சார்ந்த பல உண்மைகளும் இருக்கின்றன.

நெற்றியில் திலகம் வைப்பதால் ஏற்படும் நன்மைகள்:

நெற்றியில் திலகம் வைப்பதால் எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றன. தீய சக்தி, திருஷ்டி போன்றவை விலகும். பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதால் பல நன்மைகள் இருக்கிறது. ஆனால், இன்றைக்கு சில பெண்கள் நாகரிகம் என்ற பெயரில் பொட்டே வைப்பதில்லை. இரன்டு புருவங்களுக்கு இடையில் அனைத்து நரம்புகளும் ஒன்றாக இணைவதால் குங்குமம் வைக்கும்போது உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இரவில் தூங்க செல்வதற்கு முன் பெண்கள் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் குங்குமம் வைப்பதால் அறிவியல் ரீதியான நன்மைகள் நடைபெறும். குங்குமம் தயாரிப்பதில் துத்தநாகம் பயன்படுத்தபடுகிறது. இதனால், கும்குமம் நெற்றியில் வைத்துக்கொண்டு வெளியில் செல்லும்போது சூரியஒளி நெற்றியில் பட்டு குங்குமம் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஞாயிற்றுக்கிழமை: சூரிய பகவானுக்கு உகந்தநாள். சந்தனம் அல்லது சிவப்பு சந்தனம் தண்ணீரில் அல்லது பன்னீரில் குழைத்து பூச வேண்டும். சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.

திங்கள் கிழமை: நமது மூத்த கடவுளான சிவபெருமானுக்கு உகந்தநாள், சிவபெருமான் அளித்தருளிய புனித சாம்பலான திருநீறு பூச வேண்டும். சிவபெருமானின் அருள் இருந்தால் தான் நெற்றியில் கூட திருநீறு பூச முடியும் என்று கூறப்படுகிறது.

செவ்வாய் கிழமை: முருகன் மற்றும் அம்மனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. சந்தனத்தை பூசி அதன் நடுவில் குங்குமம் வைக்க வேண்டும். பெண்கள் நெற்றியில் குங்குமம் மற்றும் சந்தனம் வைத்திருந்தால் பார்ப்பதற்கு மங்களகரமாக இருக்கும். நெற்றியில் லட்சுமி குடியிருப்பாள் என்று கூறப்படுகிறது.

புதன் கிழமை: மஞ்சள் மற்றும் குங்குமத்தை கலந்து அல்லது தனித்தனியாக பூசி கொள்ளலாம். மஞ்சளில் உள்ள ஆன்டி வைரஸ் நம் உடலில் கிருமிகளை அண்டவிடாது. மேலும், நோய்எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கும்.

வியாழன் கிழமை: துர்க்கை மற்றும் விஷ்ணுவுக்கு உகந்தநாள். சந்தனம் அல்லது குங்குமம் நெற்றியில் திலகமாக இட்டுக்கொள்ளலாம்.

வெள்ளி கிழமை: மகாலக்ஷ்மிக்கும், குபேரருக்கும் உகந்த நாளாக கருதப்படுகிறது. குங்குமம் மற்றும் பச்சை குங்குமம் பூசி கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கிறது. மேலும், தாழம்பூ குங்குமம் திருமண ஆன பெண்கள் நெற்றியின் உச்சியில் வைப்பது நல்லது.

சனிக்கிழமை: அனுமனுக்கு உகந்த நாளாகும். செந்தூர குங்குமத்தை அணிந்து இறைவனை பிரார்தனை செய்வதால் ஆரோக்கியம் பலம் பெரும். இவ்வாறு நெற்றியில் திலகம் வைப்பதால் பல நன்மைகள் நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here