Thursday, May 16, 2024

சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு – மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை!!

Must Read

நிவர் புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் கனத்த மலை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அடையாறு பகுதிகளில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று தமிழக அரசுக்கு நீர்வளத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. எனவே அடையாறு பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும், அருகில் உள்ள நிவாரண மையங்களுக்கு செல்லுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிவர் புயல்:

நிவர் புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில், சென்னையில் கனத்த மலை பெய்து வருகிறது. எனவே செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 4027 கன அடி தண்ணீர் வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரி 24 அடி கொள்ளளவை கொண்டுள்ளது. ஆனால் தற்பொழுது 22 அடியை நீர் எட்டியுள்ளது. எனவே பொதுப்பணித்துறை முன்னெச்சரிக்கையுடன் இன்று மதியம் 12 மணியளவில் வினாடிக்கு 1000 கன அடிநீர் திறந்து விட்டுள்ளது. எனவே செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் அடையாறு ஆற்றின் வழியே கடலில் கலக்க உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில், அடையாறில் உள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் காணுநகர், சூளைப்பள்ளம், திடீர் நகர், அம்மன் நகர், பர்மா காலனி, ஜாபர்கான்பேட்டை, கோட்டூர்புரம், மற்றும் சித்ரா நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களும் அருகில் உள்ள நிவாரண மையங்களுக்கு செல்லவேண்டும் என்று தெரிவித்துள்ளது. நிவர் புயல் காரணாமாக மக்கள் நலத்தை கருத்தில் கொண்டு சென்னையில் 169 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து மத்திய நீர்வளத்துறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், அடையாறு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என கூறியுள்ளது. மேலும் சென்னை விமான நிலையத்தின் ஓடு தளங்களை முறையாக கண்காணிக்க மத்திய நீர்வளத்துறை அறிவுரை வழங்கி உள்ளது. மக்கள் அனைவரும் அச்சம் அடைய வேண்டாம் கஜா புயலையே நாம் கடந்துவிட்டோம். அதே போல் இதனையும் கடந்துவிடுவோம் என்று தெரிவித்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??

தினந்தோறும் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருவதை நாம் அறிவோம். அந்த வகையில், இன்று (மே 16) சென்னை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -