டிஎன்ஏ டெஸ்டுடன் முடிவுக்கு வந்த பாரதி கண்ணம்மா சீரியல்? கேக் வெட்டி கொண்டாடிய நட்சத்திரங்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர் முடிவுக்கு வந்துள்ளதாகவும், அதில் நடித்த நட்சத்திரங்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளதாகவும் போட்டோக்களுடன் தகவல் வெளியாகி உள்ளது.

அதிரடி தகவல்:

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா தொடர், ஒரு காலத்தில் நம்பர் ஒன் சீரியலாக இருந்து வந்தது. தற்போது, இந்த சீரியலின் ரேட்டிங் எதிர்பார்த்த அளவு இல்லை என்பதாலும், இந்த சீரியலின் காட்சிகள் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இல்லை என்பதாலும் விரைவில் இதற்கு எண்ட் கார்டு போட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தீவிரவாதி ஹைஜாகிலிருந்து பாரதியின் மருத்துவமனை மீண்டதும், இருவரும் சேர்ந்தபடி இந்த சீரியல் முடிக்கப்படலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதிலும் ஒரு ட்விஸ்ட்டாக வெண்பாவின் கர்ப்பம் அமைந்தது. தற்போது ஒரு வழியாக பாரதி, டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்க்கும் முடிவுக்கு வந்துவிட்டார். அதற்கு அவர் தயாராகி வரும் நிலையில், இந்த ரிசல்ட் எப்படி வருமோ? என்ற குழப்பத்தில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வந்து விட்டதாகவும், அந்த சீரியலின் நட்சத்திரங்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளதாகவும், ஒரு போட்டோ இணையத்தில் வெளிவந்துள்ளது. இதனைப் பார்த்து ரசிகர்கள், ஒருவேளை டி என் ஏ டெஸ்ட் பாசிட்டிவாக வந்து, பாரதி மனம் திருந்தி விடுவார் போல? கண்ணம்மாவுடன் இவர் சேர்ந்து வாழ்வதுடன் இந்த சீரியல் முடிக்கப்பட்டிருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

என்னோட ஆசையே இது ஒன்னு தான்.., சூர்யாவுடன் போட்டி போடும் நடிகர் கார்த்தி!!

மேலும் நேற்று ஃபரினா மணக்கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டிருந்தார். அதை பார்த்து விட்டு உங்களுக்கும் பாரதிக்கும் கல்யாண எபிசோடு வர போகிறதா?? என்று பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் இப்பொழுது அந்த பதிவை நீக்கி விட்டார். இதிலிருந்தே சீரியல் கடைசி கட்டத்தை நெருங்கி விட்டது என்று மட்டும் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here