சொந்த மண்ணில் கெத்து காட்டும்மா சென்னையின் FC…, பெங்களூருடன் இன்று பலபரிச்சை!!

0

இந்தியன் சூப்பர் லீக் தொடரில் சென்னையின் FC அணி, சுனில் சேஷ்திரி தலைமையிலான பெங்களூரூ அணியை இன்று சென்னையில் எதிர்கொள்ள இருக்கிறது.

இந்தியன் சூப்பர் லீக் (ISL):

இந்தியன் சூப்பர் லீக் (ISL) தொடரின் 9 வது சீசன் கடந்த 7ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், சென்னையின் FC, ஹைதராபாத், ஒடிசா உள்ளிட்ட 11 அணிகள் பங்கு பெற்று விளையாடி வருகின்றன. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு முறை போட்டி போட்டு கொள்ள உள்ளன. இந்த போட்டிகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் ஆறு இடங்களை பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதுவரை, இந்த தொடரில் 7 போட்டிகள் முடிந்த நிலையில், ஹைதராபாத் அணி 2 போட்டிகளில் விளையாடி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து இன்று சென்னையின் FC, பெங்களூரு அணியை எதிர்க்க உள்ளது. இந்த போட்டியானது சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இதில், சென்னை அணி முதல் போட்டியில் பலம் வாய்ந்த ஏ.டி.கே. மோகன் பகான் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று நம்பிக்கையுடன் களமிறங்க உள்ளது.

T20 WC : கப் முக்கியம் பிகிலு.,இந்தியா அணி இதை மட்டும் பண்ணுங்க…,முன்னாள் பயிற்சியாளர் பளிச்!!

இதே போல, இந்திய கேப்டனான சுனில் சேஷ்திரி தலைமையிலான பெங்களூரு அணியும், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை 1-0 என வெற்றிப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதற்கு கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் சென்னை அணி விளையாட உள்ளது என்பதால், சென்னையின் FC க்கு கூடுதல் பலமாகவே இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here