T20 WC : கப் முக்கியம் பிகிலு.,இந்தியா அணி இதை மட்டும் பண்ணுங்க…,முன்னாள் பயிற்சியாளர் பளிச்!!

0
T20 WC : கப் முக்கியம் பிகிலு.,இந்தியா அணி இதை மட்டும் பண்ணுங்க...,முன்னாள் பயிற்சியாளர் பளிச்!!

டி20 உலக கோப்பையில் இந்திய அணி இது ஒன்றில் மட்டும் தனி கவனம் செலுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கூறியுள்ளார்.

டி20 உலக கோப்பை 2022:

டி20 உலக கோப்பையின் 8வது சீசன் நாளை மறுநாள் ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. இந்த தொடரில், சூப்பர் 12 ல் இடம் பெற்றுள்ள இந்தியா, தனது முதல் போட்டியாக பாகிஸ்தான் அணியை வரும் 23ம் தேதி எதிர்கொள்ள உள்ளது. இந்த தொடருக்காக, அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இந்தியா ஆஸ்திரேலிய உள்ளூர் அணியுடன் போட்டியிட்டு பயிற்சி பெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி, இந்திய அணி குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில், இந்திய அணியுடன் கடந்த 7 வருடங்கள் பயணித்துள்ளேன். தற்போது, வெளியில் இருந்து இந்திய அணியை பார்க்கும் போது, பேட்டிங்கில், தொடக்க வீரர்களை தொடர்ந்து, சூர்யகுமார், ஹர்திக் பாண்டிய, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் என அதிரடியாக உள்ளனர். மேலும், இந்திய அணி பீல்டிங்கில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி, ஆசிய கோப்பையை வென்ற இலங்கை அணியை சுட்டி காட்டியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி பீல்டிங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டதால் தான் கோப்பையை வென்றது என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, எதிரணி 20 ரன்கள் எடுக்க வேண்டிய நேரத்தில், சிறப்பான பீல்டிங் மூலம் 15 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார். இந்திய அணி தனது பீல்டிங்கில் தனி கவனம் செலுத்தி உலக கோப்பையை வென்று நாடு திரும்ப வேண்டும் என எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here