தமிழக 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.,, அரசு தேர்வுகள் இயக்ககம் அதிரடி உத்தரவு!!

0
தமிழக 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.,, அரசு தேர்வுகள் இயக்ககம் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு தேர்வுகள் இயக்ககம் அதிரடியாக வெளியிட்டுள்ளது.

ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ்:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. இதையடுத்து 2021-2022 கல்வி ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 6 ஆம் தேதி தொடங்கி மே 30ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் உள்ள அரசு பள்ளிகள் , அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் 9.3 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வினை எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கான, தேர்வு முடிவுகள்  ஜூன் 20ம் தேதி வெளியானதை தொடர்ந்து, மாணவர்கள் உயர்கல்வியில் சேரும் வகையில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வை  எழுதிய அனைத்து மாணவர்களும் இன்று (வெள்ளிக்கிழமை -14.10.2022)  காலை 10 மணி முதல் ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும், தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை தேர்வு எழுதிய மையத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here