தேர்வு முடிவுகள் குறித்து TNPSC யின் முக்கிய அறிவிப்பு.,, உடனே பாருங்க!!

0

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்த ஆண்டு நடத்தப்பட்ட 4 வகையான போட்டி தேர்வுகளுக்கான முடிவுகள் குறித்து செய்து குறிப்பு வெளியாகி உள்ளது.

தேர்வு முடிவுகள்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையதின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா முக்கிய செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், TNPSC யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.tnpsc.gov.in ) டி.என்.பி.எஸ்.சி மூலம் இந்த ஆண்டு நடத்தப்பட்ட 4 போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் லிஸ்ட், நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதியும்,வெளியிடப்பட்டு உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தமிழக சிறை பணிகளில் அடங்கிய உளவியலாளர் (4 காலிப்பணியிடங்கள்) பணிக்கான தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஆன்லைனில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 30ம் தேதி நடத்தப்பட்ட கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் பதவி (8 காலிப்பணியிடங்கள்) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முக தேர்வு வரும் 31ம் தேதி நடக்க உள்ளது.

பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்(14.10.2022) -முழு விபரம் உள்ளே!!

இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் நடைபெற்ற நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பணிக்கான (29 காலிப்பணியிடங்கள்) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும் நவ.,11ம் தேதி நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. மேலும் கடந்த ஜூனில் நடத்தப்பட்ட, தமிழ்நாடு சமூக பாதுகாப்பு பணியில் அடங்கிய, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பணிக்கான (16 காலிப்பணியிடங்கள்) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும் 31ம் தேதி நேர்முக தேர்வு நடக்க இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here