என்னோட ஆசையே இது ஒன்னு தான்.., சூர்யாவுடன் போட்டி போடும் நடிகர் கார்த்தி!!

0

நடிகர் கார்த்தி சமீபத்தில் நடந்த சர்தார் பட பத்திரிகையாளர் சந்திப்பில் தனது சம்பளம் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் கார்த்தி:

தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் கார்த்தி. சமீபத்தில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான விருமன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து பெண்களின் மனதை கொள்ளை கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படம் தற்போது வரை 450 கோடிகளை அள்ளி வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்திக் மித்ரன் படைப்பில் சர்தார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது என்று படக்குழுவினர் அறிவித்தனர். தற்போது படத்தின் புரோமஷன் வேலைகள் படு தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் நடந்த சர்தார் பட பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர் சம்பளம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.,, அரசு தேர்வுகள் இயக்ககம் அதிரடி உத்தரவு!!

அதாவது பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு உங்கள் சம்பளத்தை உயர்த்தும் ஐடியா இருக்கிறதா என்று கேட்டுள்ளார். அதற்கு நடிகர் கார்த்தி, எனக்கும் சம்பளத்தை உயர்த்த ஆசையாக தான் இருக்கிறது, ஆனால் நம்ம வேலை பார்த்த அளவுக்கு கூலி கிடைத்தால் போதும். அதுமட்டுமின்றி எனக்கு அதிக சம்பளத்தை விட என் அண்ணனை போல் அதிக விருதுகள் வாங்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here