வெண்பாவின் சதியை வீடியோ எடுத்து மிரட்டும் துர்கா – சூடுபிடிக்கும் பாரதி கண்ணம்மா கதைக்களம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இதுவரையிலும் நல்லவர் என்று நினைத்துக்கொண்டிருந்த ஹவுஸ் ஓனரின் உண்மையான முகம் நேற்று தான் தெரிந்தது. இனிமேல் அவரால் கண்ணம்மாவிற்கு என்ன என்ன நடக்க போகிறதோ?? என்று தெரியவில்லை.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்றைய எபிசோடில் சௌந்தர்யா கண்ணம்மாவை நினைத்து அழுக அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் அகிலன். மேலும் கண்ணம்மாவின் ஹவுஸ் ஓனர் மிகவும் மோசமானவர் என்று நேற்று தான் தெரிந்தது. பொண்டாட்டி ஜீன்ஸ் போட்டதற்காக அடித்து சந்தேகப்படுகிறார்.

அப்பொழுது பார்த்து கண்ணம்மா உள்ளே வர எப்படியோ சமாளிக்கிறார். அதையும் நம்பிவிட்டு செல்கிறார் கண்ணம்மா. கண்ணம்மா சென்றபின்பு மறுபடியும் கையை முறுக்கி அடிக்கிறார். அடுத்ததாக வெண்பாவை காட்ட மறுபடியும் துர்கா வந்து வம்பிழுக்க வெண்பா கடுப்பாகி உனக்கு எவ்வளவு பணம் வேணாலும் தரேன் போயிடு என்று சொல்கிறார்.

ஆனால் எதையும் காதில் வாங்காத துர்கா வெண்பாவிற்கு ஒரு விடியோவை காட்டுகிறார். அதனை பார்த்த வெண்பா அதிர்ச்சியடைகிறார். 8 வருடங்களுக்கு முன்பு கண்ணம்மாவை கொல்ல துர்காவிடம் போட்ட திட்டம் எல்லாம் இந்த வீடியோவில் இருந்தது.

வெண்பா அதனை டெலீட் செய்ய போக இதே போல பல விடியோக்கள் இருப்பதாக சொல்கிறார். அடுத்ததாக வெளியே போக துர்காவை எப்படி சரிக்கட்டுவது என்று யோசித்துக்கொண்டுள்ளார். அப்பொழுது பார்த்து பாரதி அங்கு நிற்க காரில் இருந்து இறங்கி பாரதியிடம் அப்பாவை பற்றி விசாரிக்கிறார் வெண்பா.

கண்ணம்மா கைப்பற்றியதை பற்றி சொல்ல வெண்பாவிற்கு கண்ணம்மா இங்கே தான் இருக்கிறாளா?? என்று கடுப்பாகிறது. பாரதி கண்ணம்மா மீது கொலை வெறியில் இருக்கிறார் என்பது பார்க்கும்போதே தெரிகிறது. அடுத்ததாக ஹேமாவின் ஸ்கூலை காட்ட ஹேமா கண்ணம்மாவை தேடிக்கொண்டுள்ளார்.

அப்பொழுது சௌந்தர்யா சாப்பாடு கொண்டு வருகிறார்.  ஹேமாவிற்கு ஊட்டி விட ஹேமா கண்ணம்மாவை பற்றியே பேசிக்கொண்டுள்ளார். சௌந்தர்யாவிற்கும் அவரை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதன் பிறகு சௌந்தர்யா அங்கிருந்து கிளம்ப கண்ணம்மா வருகிறார்.

கண்ணம்மாவும் சௌந்தர்யாவும் பார்த்துகொள்வாரகளா இல்லையா என்று பார்த்தால் கடைசி வரை பார்க்கவே இல்லை. கண்ணம்மா ஹேமாவிடம் வர அவருக்கு ரசகுல்லா கொடுக்கிறார். அதற்கு பதிலுக்கு ஹேமாவும் சாக்லேட் தருகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here