5வது நாளாக சரிவை காணும் தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!!

0
gold

சென்னையில் கடந்த 5 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வருகிறது. தற்போது ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ 37,440 க்கும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ 4,677 க்கும் மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. இதனால் நகைப்பிரியர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

சரிந்து வரும் தங்கத்தின் விலை

தங்கம் விலை தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக குறைந்துவருகிறது. இது வியாபாரிகளை அதிர்ச்சியிலும், மக்களை சந்தோசத்திற்குள்ளாக்கியிருக்கிறது. பொருட்களின் இன்றைய விலைப்படி சாதாரண வீட்டு உபயோகப்பொருள் வாங்குவதே கடினமாக இருக்கும் நிலையில் தங்கம் வாங்குவது பெரும் சவாலான காரியமாக உள்ளது. தற்போது கடந்த ஐந்து நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிவில் இருக்கிறது. கடந்த 7 ம் தேதி முதல் தங்கம் விலை குறைந்து கொண்டே வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் டெல்லி பயணம் – பிரதமருடன் ஆலோசனை நடத்தப்போவதாக தகவல்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விலை சரிந்து சவரனுக்கு ரூ 1,480 வரை குறைந்தது. ஞாயிற்று கிழமை தங்கம் மார்க்கெட் விடுமுறை என்பதால் சனிக்கிழமை விலையிலேயே விற்கப்பட்டது. மேலும் திங்கள் கிழமை நேற்று தங்கம் விற்பனை ஆரம்பித்தது. நேற்றும் தங்கத்தின் விலை மிகவும் குறைவாகவே விற்கப்பட்து. தங்கம் நேற்று கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.4680 க்கும் சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ 37,440 க்கும் விற்கப்பட்டது. அதே போல் இன்றும் கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் 4,677 க்கும், சவரனுக்கு ரூ 24 குறைந்து ரூ37,416 க்கும் விற்பனையாகிறது. தற்போது 5 நாட்களுக்குள்ளாக தங்கத்தின் விலை ரூ 1664 வரை குறைந்துள்ளது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ 69.80 க்கு விற்பனையாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here