தமிழகத்திற்கு வந்தடைந்த கொரோனா தடுப்பூசி – மருத்துவர்கள், செவிலியர்களுக்கு முன்னுரிமை!!

0

இன்று புனேவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொரோனா தடுப்பூசி வந்தடைந்துள்ளது. மேலும் முதலாவதாக மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றோர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி:

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிக்கு ஆக்ஸ்போர்டு மற்றும் சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்காக பயன்படுத்த இந்தியா மருந்து கட்டுப்பாடு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மேலும் வரும் வாரங்களில் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. இதனை முன்னிட்டு இன்று புனேவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் 5.56 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தடைந்தது. மேலும் வரும் 16ம் தேதி முதல் தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றோர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போடப்படும். மேலும் தடுப்பூசி போட்ட 30 நாட்களுக்கு பின் மீண்டும் வந்து தடுப்பூசி போட அறிவுறுத்தியுள்ளனர். இரண்டு முறை தடுப்பூசி போட்டால் மட்டுமே அதற்கு நல்ல பலன் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போட வேண்டும் என்று நிர்பந்தம் அல்ல. விருப்பமுள்ளவர்கள் தானாக முன்வந்து போட்டுக்கொள்ளலாம்.

ஜல்லிக்கட்டு போட்டியை காண ராகுல் காந்தி தமிழகம் வருகை – வெளியான தகவல்!!

மேலும் தமிழகத்தில் சுமார் 307 மையங்கள் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் வரும் 16ம் தேதி மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கிவைக்க உள்ளார். தடுப்பூசிக்காக முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே வரும் ஜனவரி மாதம் 16ம் தேதி இலவச தடுப்பூசி வழங்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது இந்த தடுப்பூசிகள் மூலம் பக்க விளைவுகள் ஏற்படாது. ஆகவே இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here