ஹேமாவுடன் கண்ணம்மாவை பார்ப்பாரா பாரதி?? அனல் பறக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத விதமாக கண்ணம்மா ஹேமாவை ஸ்கூலில் சந்திக்கிறார். தன் மகள் என்றே தெரியாமல் எதோ ஒரு உணர்வு கண்ணம்மாவிற்கு வருகிறது. மேலும் பாரதியும் கண்ணம்மாவும் இன்றைக்கு சந்திக்கிறார்களா?? என்பதே ட்விஸ்ட்டாக உள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிற்கு ஸ்கூலில் சமைத்து தரும் ஆர்டர் கிடைக்கவே சமைத்து முடித்து ஸ்கூலுக்கு சென்று அங்கிருப்பவர்களுக்கு தருகிறார். அங்கு ஹேமா தனியாக அமர்ந்திருக்கவே எங்கேயோ பார்த்தது போல இருக்கிறதே என்று அருகில் செல்கிறார்.

ஹேமாவை கண்ணம்மாவை கண்டுபிடித்து விடுகிறார். கோவிலில் என்னை காப்பாத்துனது நீங்க தானே என்று சொல்ல அப்பொழுது தான் கண்ணம்மாவிற்கு நியாபகம் வருகிறது. ஹேமாவும் கண்ணம்மாவிற்கு நன்றி சொல்கிறார். அனைவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்க நீ மட்டும் ஏன் உக்காந்திருக்க என்று கேட்க அப்பா சாப்பாடு எடுத்துக்கொண்டு வருவதாக சொல்கிறார்.

கண்ணம்மாவிற்கு ஹேமா பசியில் இருப்பது தெரிய தனது சாப்பாட்டை ஊட்டி விடுகிறார். கண்ணம்மாவிற்கு ஊட்டி விடும் போதே கண் கலங்குகிறது. ஹேமா கண்ணம்மாவை சாப்பிட சொல்ல ஹேமா ஊட்டி விடுகிறார். பாரதி வேறு சாப்பாட்டை காரில் கொண்டு வருகிறார்.

அப்பொழுது பார்த்து கண்ணம்மா சென்று விடுகிறார். பாரதி அங்கு வர ஹேமா தான் சாப்பிட்டு விட்டதாக சொல்ல அன்னைக்கு என்னை திருவிழாவில் காப்பாற்றியவர் தான் இப்பொழுது தனக்கு சாப்பாடு ஊட்டி விட்டதாக சொல்கிறார். மேலும் எனக்கு அம்மா இல்லை இத்தனை நாள் கவலை பட்டதாகவும் இது தனக்கு சந்தோசமாக இருப்பதாகவும் சொல்கிறார்.

பாரதிக்கு இது குழப்பமாக உள்ளது. மேலும் கண்ணம்மா வீடு எப்படி தேடுவது என்று யோசிக்க ஒரு வீட்டை பார்க்கிறார். வீட்டு ஓனர் அங்கு வர கண்ணம்மாவை உள்ளே அழைத்து செல்கிறார். துளசியும் அங்கே வர வீடு பிடித்து போகிறது. வீட்டின் ஓனரும் நன்றாக கவனித்துக்கொள்ள கண்ணம்மாவிற்கு நிம்மதியாக உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அடுத்து ஹேமா வேறு ஒரு பெண்ணிடம் சாப்பிட்டார் என்ற உண்மை தெரிந்ததும் சௌந்தர்யா அஞ்சலி மீது கோவமடைகிறார். அடுத்து லட்சுமியை எப்படி படிக்க வைப்பது என்று யோசித்துக்கொண்டுள்ளார். மேலும் லட்சுமி தான் ஸ்கூலில் படிப்பதாக சொல்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here