தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர்கள் கோரிக்கை – கல்வித்துறை தகவல்!!

0
school reopen

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு பள்ளிகளை திறக்கலாம் என்ற அரசு நடத்திய கருத்து அறியும் கூட்டத்தில் 70% பெற்றோர்கள் 10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாம் என ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பள்ளிகள் திறப்பு

மார்ச் மாத ஊரடங்கை ஒட்டி நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி மீண்டும் பள்ளிகளை திறக்கலாம் என அரசு முடிவெடுத்திருந்தது. புதுச்சேரியில் கடந்த 4 ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பின்பு பள்ளிகளை திறப்பது குறித்தும் பெற்றோர்களிடம் கருத்து கேட்பது குறித்தும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது.

ஜனவரி 20 இல் அதிகார மாற்றம் நிகழும்’ – ஒரு மனதாக சம்மதித்த டிரம்ப்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதை தொடர்ந்து அரசு நடத்திய கருத்து அறியும் கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர்களில் 70% பேர் அரசின் இந்த முடிவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 10 ம் மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொது தேர்வுகள் கட்டாயமாக உண்டு என்று பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்த பட்சத்தில் வரும் பொங்கல் பண்டிகைக்கு பின்பு பள்ளிகள் திறக்கப்படலாம் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here