பாரதி கண்ணம்மா சீரியலில் இனி இவருக்கு பதில் இவர் தானா?? ஷாக்கான ரசிகர்கள்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிற்கு அப்பாவாக நடித்த வெங்கட் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது பலரையும் வேதனையாக்கியது. இந்நிலையில் அவருக்கு பதில் நடிக்க இருப்பவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் தொடர்ந்து பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. லட்சுமி ஹேமா படிக்கும் ஸ்கூலில் சேர அப்பாவின் பெயரை கேட்கின்றனர். இதனை லட்சுமி கண்ணம்மாவிடம் கேட்க பாரதி என்று சொல்கிறார். இதனால் லட்சுமி அதிர்ச்சியாகிறார். அடுத்தடுத்து பாரதி பற்றிய உண்மை லக்ஷ்மிக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்பதே ட்விஸ்ட்டாக உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது பாரதிக்கும் கண்ணம்மாவிற்கும் முட்டிக்கொண்டு தான் உள்ளது. இன்னும் வெண்பாவின் பேச்சை நம்பி கண்ணம்மாவை சந்தேகப்பட்டுக்கொண்டு தான் உள்ளார். ஆனால் இதில் முழுதாக பாதிக்கப்பட்ட கண்ணம்மா கஷ்டப்பட்டு லட்சுமியை வளர்க்கிறார். லட்சுமியும் தன் அப்பாவை பற்றி கேட்காத நாளும் இல்லை. கண்ணம்மா அதனையும் சமாளித்துக்கொண்டு தான் உள்ளார். இப்படி பாரதி கண்ணம்மா சீரியல் பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

‘தனுஷுக்கு கட்டாயம் அடுத்து தேசிய விருது காத்திருக்கு’ – ‘கர்ணன்’ திரைவிமர்சனம்!!

அந்த சீரியலில் கண்ணம்மாவிற்கு அப்பாவாக நடித்து வந்தவர் தான் வெங்கட். அவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அதன் பிறகு சில நாட்களாக அந்த கதாபாத்திரத்தையே காட்டவில்லை. இந்நிலையில் அவருக்கு பதில் நடிக்க இருப்பவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here