மாஸ்டர் பட நடிகர் கையால் விருது பெற்ற ஷிவாங்கி – எல்லா பக்கமும் கலக்குறீங்களே! ரசிகர்கள் வாழ்த்துமழை!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஷிவாங்கி சன் தொலைக்காட்சி நடத்தும் விருது வழங்கும் விழாவில் விருதை பெற்றுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

ஷிவாங்கி

சூப்பர் சிங்கர் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் ஷிவாங்கி. தனது குழந்தை தனமான செயலால் தொடர்ந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். ஆனாலும் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அவருக்கு அங்கீகாரத்தை பெற்று தந்தது. அதன் முதல் சீசன் முழுவதும் சமைக்க தெரியாமலேயே செய்த அட்டகாசத்தால் குக்குகளிடம் அடிவாங்கினார்.

அதுவும் வனிதா, ரேகா போன்றோரிடம் செம வெளுத்து வாங்கினார். இது பார்ப்பதற்கு கஷ்டமாக தான் இருந்தது. ஷிவாங்கியின் அம்மாவும் இதற்கு மிகவும் வருத்தப்பட்டு இன்ஸ்டெர்வியூ கொடுத்திருந்தார். அனால் தற்போது மாஸ் என்றால் அது ஷிவாங்கி தான். எங்கு சென்றாலும் ஷிவாங்கிக்கு நல்ல பெயரும் மதிப்பும் உள்ளது. தற்போது சமூக வலைத்தளங்களை திறந்தாலே அதில் ஷிவாங்கி அஸ்வின் பற்றி தான் இருக்கும்.

மேலும் பல விருதுகளையும் வாங்கி வருகிறார். பிரபல நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் விருது வாங்கினார். அதன் பிறகு தற்போது சன் டிவியில் ‘பிளாக் ஷீப் டிஜிட்டல் அவார்ட்’ என்ற விருது வழங்கும் விழா நடக்க உள்ளது. அதிலும் ஷிவாங்கி விருது பெற்றுள்ளார். மாஸ்டர் படத்தின் வில்லனான அர்ஜுன் தாஸ் மற்றும் சஞ்சனா சிங் கையால் இந்த விருதை பெற்றுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here