லட்சுமி கண்ணம்மா வீட்டில் இருப்பதை பார்த்து சந்தேகிக்கும் ஹேமா – உண்மை வெளிவருமா?? கடுப்பாகும் பாரதி!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா கண்ணம்மா வீட்டில் தங்கி இருக்க பாரதி செய்யும் அனைத்து உதவிகளையும் தவிர்க்கிறார். மேலும் வெண்பா இத்தனை நாள் கழித்து சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார்.

பாரதி கண்ணம்மா

ஹேமா கண்ணம்மாவுடன் வீட்டில் தங்கி இருக்க தற்போது துளசியும் வீட்டிற்கு வர ஹேமா இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார். அதுவும் பாரதி வந்து விட்டார் என்று சொன்னதும் மேலும் அதிர்ச்சியாகிறார். மேலும் கண்ணம்மா செய்யும் அனைத்து விஷயங்களும் ஹேமா ஆச்சரியமாக பார்க்கிறார்.

barathi kannamma
barathi kannamma

அதன் பின் ஹேமா படிக்க ரூமுக்குள் செல்ல அப்பொழுது பார்த்து லட்சுமியும் வருகிறார். தனக்கு ஹேமா இல்லாததால் ஸ்கூலுக்கு செல்ல பிடிக்கவே இல்லை என்று சொல்கிறார். அப்பொழுது ஹேமாவை கண்ணம்மா அழைக்க லட்சுமி மிகவும் சந்தோஷமடைகிறார்.

ஹேமா நீ எங்க இப்படி என்று கேட்க லட்சுமி என்ன சொல்ல போகிறார் என்று அதிர்ச்சியில் இருக்க லட்சுமி எப்படியோ சமாளிக்கிறார். அதாவது தன் அம்மா ஊருக்கு சென்றிருப்பதாகவும், அதனால் சமையல் அம்மா வீட்டில் விட்டு சென்றதாகவும் சொல்கிறார்.

அதன் பின் ஹேமா மீண்டும் படிக்க செல்ல லட்சுமி கோவமடைகிறார். ஹேமா இருக்கும் வரை உன்னை சமையல் அம்மா என்று தான் சொல்ல வேண்டுமா?? என்று கேட்கிறார். தனக்கு சமையல் அம்மா என்று சொன்னால் சுத்தமாக பிடிக்கவே இல்லை என்றும் சொல்கிறார்.

அடுத்ததாக பாரதி வீட்டிற்கு கண்ணம்மா அனுப்பி விட்ட ஏசி வர எதுவும் புரியாமல் பார்க்கின்றனர். கண்ணம்மா தான் திருப்பி அனுப்பி விட்டதாக சொல்கிறார். இதனை கேள்விப்பட்டு பாரதி கோவப்படுகிறார். மேலும் தான் பணம் கொடுத்ததையும் சௌந்தர்யாவிடம் சொல்கிறார்.

நார் கூடையை தலையில் மாட்டி சூரிய ஒளியில் மின்னிய வேதிகா… அழகு கொஞ்சும் லேட்டஸ்ட் கிளிக்!!

நீ செய்தது தவறு என்று சௌந்தர்யா சுட்டி காட்டுகிறார். அடுத்ததாக வெண்பாவை காட்டுகின்றனர். வெண்பாவை சாந்தி மேலும் ஏற்றி விடுகிறார். கஷ்டம்னா மட்டும் தான் பாரதி இங்க வராரு, சந்தோசமா இருந்த திரும்பி கூட பாக்க மாட்டேங்குறாரு என்று சொல்ல வெண்பாவிற்கு கோவம் வருகிறது.

மேலும் உங்களுக்கு இதுவரைக்கும் ஏதாச்சும் வாங்கி கொடுத்து இருப்பாரா?? என்று கேட்கிறார். வெண்பா யோசிக்க ஆரம்பிக்க அப்பொழுது பாரதி வந்து வெண்பாவிடம் கண்ணம்மாவை பற்றி சொல்லி திட்டுகிறார். ஏசி வாங்கி கொடுத்ததில் இருந்து ஹேமா அங்கு இருப்பதை பற்றி சொல்ல வெண்பாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்துவிடும் போல உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here