கமலின் விக்ரம் படத்தில் இணையும் பிரபல நடிகரின் வாரிசு…!யாருன்னு நீங்களே பாருங்கள்!!!

0

உலக நாயகன் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் படம் விக்ரம். இந்த படம்  ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது கமல் அவர்களின் மகன் கதாபாத்திரத்தில் பிரபல முன்னணி நடிகர் ஜெயராம் அவர்களின் மகன் காளிதாஸ் ஜெயராம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் உருவாகி வரும் படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.  மேலும் அவர்களை தவிர்த்து மேலும் சில நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்திற்கான பிரஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி படு வைரலானது.

மேலும்  கமல், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் மிக மிரட்டலான தோற்றத்தில் வெளியான அந்த பிரஸ்ட் லுக் போஸ்டர், படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டியது. இதையடுத்து படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை பற்றிய புதிய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்து உள்ளது.

அதாவது கமல் அவர்களுடன் பஞ்சதந்திரம், தெனாலி உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தவர் நடிகர் ஜெயராம். தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரு முன்னணி நடிகராக இருக்கும் ஜெயராம் அவர்களின் மகன் காளிதாஸ் ஜெயராம் ஆவார். இந்த காளிதாஸ் ஜெயராம் தற்போது விக்ரம் படத்தில் கமல் அவர்களின் மகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here