Thursday, May 16, 2024

அதிக காலம் பதவி பிரதமராக வகித்த பஹ்ரைனின் இளவரசர் மரணம் – அரசு சார்பில் 1 வாரம் துக்கம் அனுசரிப்பு!!

Must Read

உலகின் மிக அதிக காலம் பிரதமராக பதவி வகித்த பஹ்ரைனின் இளவரசர் இன்று காலமாகியுள்ளார். அவரது மறைவினை அடுத்து ஒரு வார காலம் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹ்ரைனின் இளவரசர்:

உலகில் உள்ள பிரதமர்களில் மிக அதிக காலம் பிரதமராக பதவி வகித்து வந்த பஹ்ரைனின் இளவரசர் லீஃபா பின் சல்மான் அல் கலீஃபா. இவர் கடந்த நவம்பர் மாதம் 1935 ஆம் ஆண்டு பிறந்தார். பஹ்ரைனின் இளவரசராக இருந்த இவர் அரசியல்வாதிகவும் இருந்தார். கடந்த 1971 ஆம் ஆண்டு பஹ்ரைன் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. அப்போதுதிலிருந்து பஹ்ரைனின் இளவரசர் லீஃபா பின் சல்மான் அல் கலீஃபா தான் பிரதமராக இருந்து வருகின்றார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அவர் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி 1971 ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றார். இதனால் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இன்று காலமாகியுள்ளார். தனது 84 வயதில் மரணம் அடைந்துள்ள லீஃபா பின் சல்மான் அல் கலீஃபா மறைவினை அடுத்து நாடு முழுவதும் அரசு முறை சார்பில் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதே போல் கொடிகள் அனைத்தும் அரைக்கம்பத்தில் பறக்கவிடபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுத்துறைகள் மற்றும் அமைச்சகங்கள் மூன்று நாட்கள் செயல்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனா நோய் பரவல் காலம் என்பதால் மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இறுதி சடங்கில் பங்கேற்பர் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -