அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் – உச்சநீதிமன்றம் உத்தரவு!!!

0
arnab goswami 1
arnab goswami 1

அன்வாய் நாயக் தற்கொலை வழக்கில் கைதான அர்னாப் கோஸ்வாமி மற்றும் மேலும் இருவருக்கு இன்று உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீனை வழங்கியுள்ளது.

அர்னாப் கோஸ்வாமி

மும்பையில் 2018 ஆம் ஆண்டு நடந்த உள்வடிவமைப்பாளரான அன்வாய் நாயக் மற்றும் அவரது தாயார் தற்கொலை வழக்கில் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டார். இந்த விசாரணை வழக்கு முடிவடைந்த நிலையில் இதனை போலீசார் மீண்டும் விசாரித்தனர்.

arnab goswmi
arnab goswmi

நவ. 4 ஆம் தேதி அர்னாப் கோஸ்வாமி, நிதீஷ் சர்தா மற்றும் பர்வீன் ராஜேஷ் சிங் கைது செய்யப்பட்டனர். இவர்களை போலீசார் ஆஜர்படுத்திய நிலையில் நவ 18 ஆம் தேதி வரை நிதீமன்ற காவலில் வைக்க உத்தரவு வழங்கப்பட்டது.

ஜாமீன்

இந்த அவசர வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ரிப்பளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் இந்த வழக்கில் கைதான மேலும் இருவருக்கு ரூ.50,000 பிணைத்தொகை செலுத்துமாறு உத்தரவிட்டு ஜாமீன் வழங்கியது. தற்போது சிறையில் உள்ள 3 வரும் ஜாமீன் வழங்கி மனு அனுப்பினார்.

arnab koswami
arnab koswami

அந்த மனுவை தள்ளுபடி செய்தது, மும்பை உயர்நீதிமன்றம்.மும்பை உயர்நீதிமன்றம் அந்த மனுவை மறுத்த நிலையில் அர்னாப் கோஸ்வாமி இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தை நாடினார். உச்சநீதிமன்றமும் அவர்கள் மனுவை விசாரித்தப் பின் இடைக்கால ஜாமீனை அவர்களுக்கு இன்று வழங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here