பட்டையை கிளப்பிய பிரபுதேவாவின் பஹிரா டீஸர் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

தற்போது பிரபுதேவா லேட்டஸ்ட்டாக நடித்திருக்கும் படம் தான் பஹிரா. இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த டீசரை பார்த்த ரசிகர்கள் தற்போது ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பஹிரா:

தமிழ் திரையுலகினரை தனது நடிப்பு மூலமும் தனது நடனத்தின் மூலமும் அனைவரையும் எளிமையாக ஈர்த்தவர் தான் பிரபுதேவா. இவர் ஆரம்ப காலத்தில் தொடர்ந்து பல படங்களை நடித்து வந்தார். அவை அனைத்தும் இவரது ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது. மேலும் இவரது நடனத்திற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். மேலும் சில காலமாக இவர் படத்தை இயக்கி மற்றும் நடன ஆசிரியராகவே சினிமா உலகில் திகழ்ந்து வந்தார். ஓர் பெரிய இடைவெளிக்கு பின்பு தமிழில் தேவி என்னும் திரைப்படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த படம் ரசிகர்கள் அனைவராலும் வெகுவாக கவரப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் தமிழில் பல படங்களில் தற்போது நடித்து வருகிறார். தற்போது பிரபுதேவா மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் பஹிரா என்னும் திரைப்படம் உருவாகி வந்தது. தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இதனை தனுஷ் வெளியிட்டார். இந்த டீஸர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் பிரபு தேவா பல கெட்டப்பில் நடித்துள்ளாராம்.

மகளை சுத்தியலால் அடித்து தானும் தற்கொலை செய்துகொண்ட தந்தை – சேலத்தில் நடந்த சோகம்!!

இந்த படத்தில் மிக இளமையாக தெரிகிறார் என்று ரசிகர்கள் புகழ்ந்து வந்தனர். மேலும் அவரது கெட்டப்பை பார்த்து அனைவரும் பிரமிப்படைந்துள்ளனர். மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் படம் என்றாலே அது தனித்துவமாக தான் இருக்கும். தற்போது இந்த படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் டீசரை பொறுத்தவரை மன்மதன் படத்தில் சிம்பு தன்னிடம் பழகும் பெண்களை கொலை செய்து வருவது போல் இந்த படம் இருக்கும் என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here