குளிர்சாதன வசதியுடன் பேருந்துகள் இயக்கம் – தமிழக அரசு அனுமதி!!

0

கொரோனவால் நிறுத்தப்பட்டிருந்த குளிர்சாதன பேருந்து வசதிகள் தற்போது மீண்டுமாக இயங்க ஆரம்பித்துள்ளது. இதற்கான தமிழக அரசின் அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பேருந்துகளில் குளிர்சாதன வசதி

குளிர்சாதன வசதியுடன் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க பேருந்துகளில் பயன்படுத்தப்படும் குளிர்சாதன வசதிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது தமிழக அரசு. தொடர்ந்து தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வருவதை ஒட்டி, குளிர்சாதன வசதிகளிடன் பேருந்துகளை பயன்படுத்தும் படி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. குளிர்சாதன வசதியுடன் செயல்படும் பேருந்துகளில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆஸ்துமா, நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

டாப் ஆங்கிளில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ரக்ஷிதா – அசந்து போன ரசிகர்கள்!!

குளிர்சாதன வசதியுள்ள பேருந்துகளில் கண்டிப்பாக கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும், பேருந்துகளில் குளிர்நிலை 24-30 டிகிரி செல்ஸியஸ் அளவு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் குளிர்சாதன வசதி கொண்ட 702 பேருந்துகள் இயக்கப்படாததால் தமிழக அரசின் வருமானத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here