அபாரதத்திற்கு பதில் முத்தம் – போலீஸ் ஆபிசர் அதிரடி சஸ்பெண்ட்!!

0

பெருவில் போலீஸ் ஆபிசர் ஒருவர் வாகனத்தில் வந்த பெண்ணிடம் அபராதம் பெறுவதற்கு பதில் முத்தம் பெற்றுள்ளார். தற்போது இதனை தொடர்ந்து அந்த போலீசார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பெரு:

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மக்களுக்கு போலீசார் மிக கடுமையான விதிமுறைகளை விதித்தனர். மேலும் இந்த விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் கடுமையான அபராதத்தை விதித்து வந்தனர். தற்போது இதுபோல் ஓர் சம்பவத்திற்கு பெருவில் ஓர் அதிர்ச்சிகரமான செயல் ஒன்று நடந்துள்ளது. பெருவில் கொரோனா விதிமுறைகளை பின் பற்றாமல் ஓர் பெண் ஒருவர் வாகனத்தில் வந்தார். அவரை மறித்த போலீஸ் ஆபீசர் அவரிடம் அபராதம் வசூலிக்க முடிவு செய்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்பின்பு மனம் மாறிய அந்த போலீஸ் அவரிடம் பக்கத்தில் சென்று அபாரதத்திற்கு பதில் முத்தமிட்டுள்ளார். அதன்பின்பு அந்த பெண்ணையும் அனுப்பியுள்ளார் போலீஸ் ஆபீசர். இந்த நிகழ்வு அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியது. மேலும் இந்த வீடியோ பெருவில் உள்ள பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – இறுதிப்போட்டியில் மோதும் ஒசாகா மற்றும் பிராடி!!

இந்த செய்தி தற்போது பெரு தலைநகராமான லிமா அமைந்துள்ள மிராஃப்ளோர்ஸ் மாவட்ட மேயருக்கு தெரியவந்தது. இதனை குறித்து அந்த போலீஸ் ஆபீசரிடம் விசாரணை நடத்த மேயர் உத்தரவிட்டார். மேலும் பெரு அரசு அந்த போலீஸ் ஆபீசரை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த நிகழ்வினால் பெருவில் போலீஸ் மீதுள்ள மதிப்பு மக்களுக்கு குறைய தொடங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here