Friday, May 17, 2024

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் மீது பெண் பாலியல் புகார் – ரசிகர்கள் அதிர்ச்சி!!

Must Read

பாகிஸ்தானிய வீரர் பாபர் அசாம் மீது ஒரு பெண் அவர் தன்னை பயன்படுத்தி கொண்டதாகவும், தனக்கு அவரை 16 வயதில் இருந்தே தெரியும் என்று கூறியுள்ளார். இதனால் பிரபல வீரர் பாபர் அசாமிற்கு இந்த பெண் மூலமாக நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் பாபர்:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டனான இருப்பவர் தான், பாபர் அசாம். எல்லா விதமான ஆட்டங்களிலும் ஐ.சி.சி தரவரிசையில் முதல் ஐந்து இடங்களில் இடம் பெற்ற ஒரே வீரர் இவர் தான். தற்போது தனது அணியுடன் நியூசிலாந்து சென்றுள்ள அவர் இரண்டு ஒரு நாள் தொடர்கள் மற்றும் ஒரு டெஸ்ட் ஆட்டங்களில் விளையாட உள்ளார். இந்த தொடர்கள் வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி ஆரம்பித்து ஜனவரி 7 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இப்படியான நிலையில் பாபர் மீது ஒரு பெண் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அந்த பெண் கூறியிருப்பதாவது, “பாபரை எனக்கு சிறு வயதில் இருந்தே தெரியும். அவர் கிரிக்கெட் வீரர் ஆவதற்கு முன்பே எனக்கு நன்றாக தெரியும். அவர் எனக்கு 16 வயதாகும் போது என்னை காதலிப்பதாக தெரிவித்தார். 2010 ஆம் ஆண்டு என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்தார். அவர் என்னுடன் பாலியல் உறவில் ஈடுபட்டார். அதன் பின் என்னை அதிகமாக துன்பபடுத்தினார். நான் கர்ப்பம் கூட தரித்தேன்”

காவல்துறை SI போட்டி தேர்வுகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு – சீமான் வலியுறுத்தல்!!

அதன்பிறகு அவர் என்னை ஏமாற்றிவிட்டார். அவர் எனக்கு செய்த அநீதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். நான் கர்ப்பமானது வெளியே யாருக்கும் தெரிய கூடாது என்பதற்காக என்னை அடிக்க கூட செய்துள்ளார். இதனால் அவரிடம் இருந்து எனக்கு நீதி கிடைக்க வேண்டும்” இவ்வாறாக தெரிவித்துள்ளார். இந்த பெண் ஏற்கனவே பாபர் அசாம் மீது குற்றம் சாட்டி அவர் கூறியது பொய் என்பதால் பாபர் அசாமிடம் மன்னிப்பு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL Points Table: 3வது அணியாக PlayOff சுற்றுக்கு தகுதி பெற்ற SRH.. மற்ற அணிகளின் நிலை என்ன??

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -