மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் – மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம்!!

0

பல மாத எதிர்பார்ப்புக்கு பிறகு, மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ ஜி 5 ஜி ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை பட்ஜெட் மற்றும் பிரீமியம் பிரிவில் தொலைபேசிகளை வெளியிட்டு வந்த அந்நிறுவனம் 5ஜி பிரிவில் களமிறங்கி உள்ளது. மோட்டோ ஜி 5 ஜி வசதியுடன் வரும் முதல் மலிவு விலை ஸ்மார்ட்போன் என கூறப்படுகிறது. இது ஒன்பிளஸ் NORD ஸ்மார்ட்போனுக்கு கடுமையான போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோரோலா 5ஜி:

மோட்டோ ஜி 5 ஜி ஸ்மார்ட்போனில் பெரிய திரை, சக்திவாய்ந்த பேட்டரி, டிரிபிள் கேமரா அமைப்பு மற்றும் பல சுவாரஸ்யமான அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மோட்டோரோலா இந்தியாவில் மோட்டோ ஜி 5 ஜி ரூ.20,999க்கு 6 ஜிபி ரேம் வேரியண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி எச்.டி.எஃப்.சி கார்டைப் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு உடனடி ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சில்வர் மற்றும் பிரௌன் என இரண்டு அட்டகாசமான வண்ண விருப்பங்களுடன் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 7 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட்டில் நேரடியாக விற்பனை செய்யப்பட உள்ளது.

மோட்டோ ஜி 6.7 இன்ச் ஃபுல்-எச்டி + எல்டிபிஎஸ் டிஸ்ப்ளேவினை கொண்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி SoC மற்றும் 6 ஜிபி ரேம் & 128 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட்டை இந்திய சந்தைக்கு கொண்டு வந்த முதல் ஸ்மார்ட்போன் மோட்டோரோலா என்பது குறிப்பிடத்தக்கது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மோட்டோ ஜி 5 ஜி பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார். முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. 5W எம்ஏஎச் பேட்டரி 20W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கொண்டுள்ளது. இது வெறும் 15 நிமிடங்களில் 10 மணிநேர பவரை வழங்கும் என மோட்டோரோலா நிறுவனம் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here