நாக்கில் நரம்பில்லாமல் பேசும் ஈஸ்வரி.., ஒத்து ஊத்தும் கஞ்சபிஸ்நாரி செழியன்.., பொங்கி எழும் பாக்கியா!!

0
நாக்கில் நரம்பில்லாமல் பேசும் ஈஸ்வரி.., ஒத்து ஊத்தும் கஞ்சபிஸ்நாரி செழியன்.., பொங்கி எழும் பாக்கியா!!
நாக்கில் நரம்பில்லாமல் பேசும் ஈஸ்வரி.., ஒத்து ஊத்தும் கஞ்சபிஸ்நாரி செழியன்.., பொங்கி எழும் பாக்கியா!!

பாக்கியலட்சுமி தொடரின் நேற்றைய எபிசோட்டில் இனியா பாக்கியாவை கண்டபடி பேச, உடனே எழில் வயசுக்கு ஏத்த மாதிரி பேசு. அம்மாவை எதுக்கு இப்போ எதிர்த்து பேசுற என கேட்க, உடனே ஈஸ்வரி எழிலை பார்த்து அவ சின்ன பொண்ணு அவளை எதுக்கு திட்டுற. அவ கேக்குறதுலயும் தப்பு இல்லையே. எல்லாம் போக போக பெரிய பிள்ளையானதும் புரிஞ்சி நடந்துப்பா.

நீ திட்டாத என சொல்ல, தாத்தா ஈஸ்வரியை பார்த்து எழில், இனியாவுக்கு அண்ணன். அவனுக்கு அவளை திட்றதுக்கு எல்லா உரிமையும் இருக்கு என சொல்கிறார். உடனே இனியாவும் வீட்டுல எப்போ பாரு சண்டைதான் இப்போவெல்லாம் என சொல்லிவிட்டு எரிச்சலுடன் அங்கிருந்து கிளம்புகிறார். அந்த சமயம் கரண்ட் பில் கணக்கெடுக்க ஒருவர் வருகிறார். உடனே பாக்கியாவும் கரண்ட் பில் அட்டையை எடுத்து கொடுக்கிறார்.

அவரும் கணக்கெடுத்துவிட்டு அட்டையை பாக்கியாவிடம் கொடுக்க, அதை பார்த்து விட்டு ஷாக் ஆகிறார். அப்போ எவ்ளோ வந்திருக்கு அக்கா என செல்வி கேட்கிறார். அதற்கு பாக்கியா 17,000 ரூபாய் வந்திருக்கு, நான் 10,000 வரும்னு தான் எதிர்பார்த்தேன் என சொல்லி புலம்புகிறார். இதை பார்த்து ஈஸ்வரியும், இதெல்லாம் முன்ன பின்ன கட்டியிருந்தா தெரிஞ்சிருக்கும் அப்டினு மீண்டும் மகனை உசரமா வச்சுபாக்கியாவை குறை சொல்கிறார்.

உடனே செழியன் அப்பா இருந்த வரை செலவு எதுவும் தெரிய வராமல் அவரே கட்டிவிடுவார். ஆனா இப்போ நிலைமையை பாருங்க. எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம் என பாக்கியவை காரணம் காட்டுகிறார். உடனே எழில், என்னமோ அம்மா வேணும்னே அவரை வீட்ட விட்டு அனுப்புன மாதிரி எல்லாரும் பேசுறீங்க.

அவரு செஞ்ச தப்பு எதுமே கண்ணுக்கு தெரியாதா என கேட்க, செழியனும் செஞ்ச நன்மையை மறக்க கூடாதுனு நினைக்குறேன் என சொல்லி மீண்டும் பாக்கியவையே குற்றம் படுகிறார். இப்படி எழிலுக்கும், செழியனுக்கும் இடையே வாக்குவாதம் சண்டையாக மாறுகிறது. அதுக்கும் ஈஸ்வரி குடும்பத்துல இருந்த மொத்த சந்தோஷமும் போச்சு, பாரு எல்லாமே உன்னால தான் பாக்கியா என சொல்ல, தாத்தா எல்லாரும் நிறுத்துங்க போங்க உள்ள என சொல்லி அதட்டுகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் பிறகு பாக்கியாவிடம் நீ ஏதும் மனச போட்டு குழப்பிக்காதம்மா அவங்க பேசுனது வச்சு என ஆதரவு சொல்கிறார். அதுக்கு பாக்கியா பரவாயில்ல மாமா எல்லாம் எனக்கு பழகிருச்சு. இதெல்லாம் எனக்கு என்ன புதுசா? நான் ஒன்னும் நினச்சிக்கல மாமா என பொய்யாக நடிக்கிறார். அதே சமயம் ஜெனியும், செல்வி அக்காவும் நீங்க பண்றதெல்லாம் சரி தான். எதுக்கும் பீல் பண்ணாதீங்க என சொல்ல, அதற்கு பாக்கியா எல்லாத்துக்கும் தீர்வு பணம் மட்டும் தான்.

அதுக்கு எதாவது பண்ணனும் என சொல்கிறார். இந்த பக்கம் ஜெனி, செழியனை பார்த்து நீ ஆண்ட்டிய இப்படி பேசுறத மொத ஸ்டாப் பண்ணு. அவங்க பாவம் என சொல்ல, செழியனும் உனக்கு ஒன்னும் தெரியாது என மீண்டும் பாக்கியவை குறை சொல்கிறார். அதற்கு ஜெனி, இவ்ளோ பேசுறல அப்போ நீயே அந்த கரண்ட் பில்ல கட்டு என ட்விஸ்ட் வைக்கிறார். அதுக்கும் செழியன் நான் ஒரு காசு கூட செலவு செய்யமாட்டேன் என எஸ்கேப் ஆகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here