TNPSC மூலம் நிரப்பப்படும் பணி நியமன அரசாணைக்கு தடை.. நீதிமன்றம் உத்தரவு – தேர்வர்கள் அதிர்ச்சி!

0
TNPSC மூலம் நிரப்பப்படும் பணி நியமன அரசாணைக்கு தடை.. நீதிமன்றம் உத்தரவு - தேர்வர்கள் அதிர்ச்சி!

தமிழக அரசு அண்மையில் TNPSC மூலம் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற அரசாணையை வெளியிட்டது. தற்போது இந்த அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இடைக்கால தடை:

தமிழக அரசாங்கத்தில் உள்ள எல்லா பணிகளுக்கும் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அண்மையில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நியமனம் குறித்து தமிழக அரசு ஒரு அரசாணையை வெளியிட்டது. அந்த அரசாணையில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பணிக்கு TNPSC மூலம் தேர்வு ஏழுதி பணி அமர்த்தப்படும். மேலும் தேர்வர்கள் பட்டப்படிப்பு உடன் இரண்டு வருடம் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் இந்த பணிக்கு தற்காலிமாக தகுதியான நபர்கள் பணியமர்த்தப்பட்டு பின்னர் நிரந்தரமாக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறையை சேர்ந்த ஸ்ரீவாச மாசிலாமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் மனுதாரர் சார்பில் இருந்து வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, தற்காலிகமாக பணி நியமனத்திற்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வும், பட்டப்படிப்பும் அவசியம் இல்லை, இதனால் அரசாங்கம் வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வாதாடினார். அத்தனை கருத்தையும் ஏற்றுக் கொண்ட நீதிபதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து தீர்ப்பளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here